வேண்டிய வரம் அருளும் திருவேற்காடு கருமாரி அம்மன்

By Aishwarya May 14, 2025 07:01 AM GMT
Report

சென்னையில் உள்ள அம்மன் தலங்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் தலம் என்ற சிறப்பைப் பெற்ற தலம் திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயம். திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர். வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது.

பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது. பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர். கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது. நாளடைவில் வேலங்காடு திருவேற்காடாக மாறியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது. இந்த கருமாரி யார் நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்? அதற்கு ஒரு புராண கதை உள்ளது.

சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?

சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?

கருமாரி என்ற பெயரில் இருக்கும்

க - கலைமகள்;

ரு - ருத்ரி;

மா - திருமகள்;

ரி - ரீங்காரி (நாத வடிவானவள்)

என ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் சொல்வர். இந்த நான்கு தெய்வங்களின் அம்சமானவளாகக் கருதலாம்.

வேண்டிய வரம் அருளும் திருவேற்காடு கருமாரி அம்மன் | Thiruvenkadu Temple

தல வரலாறு 1:

துவாபரயுகம்... கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான். தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது. 'கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்' என்று அது தெரிவித்தது.

அதனால் ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் கம்சன். அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான். ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன.

தேவகியின் எட்டாவது கர்ப்பம். அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன். அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள். அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா சக்தி. தேவகிக்குக் குழந்தை பிறந்தது.

இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது. யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது. அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது. குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான்.

வீர யுகத்தின் வேல் வணக்கம் தொடரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

வீர யுகத்தின் வேல் வணக்கம் தொடரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான். அசரீரி அறிவித்தது ஆண் பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என கூறியது. இருந்தும் கம்சன், 'உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்' என வாளை ஓங்கினான். அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.

'அடேய் ஆத்திரக்காரா. கருமாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா! உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு' என்று சொல்லி மறைந்தது. காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய நிலையில் கண்டு செந்தமிழால் போற்றி துதித்தார்.

அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில், பவுர்ணமி தினத்தில், பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில். இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள்.

வேண்டிய வரம் அருளும் திருவேற்காடு கருமாரி அம்மன் | Thiruvenkadu Temple

'அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது. இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன். மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன். கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன். அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும்.

பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.' அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின. வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது. இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

திருமணத்தில் தொடர் தடைகளா? அகர முத்தாலம்மனை ஒருமுறை வழிபாடு செய்தால் போதும்

திருமணத்தில் தொடர் தடைகளா? அகர முத்தாலம்மனை ஒருமுறை வழிபாடு செய்தால் போதும்

புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று, அன்னையை அடிபணிவோருக்கு அபயம் அளிக்கிறது.

புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள். கருணையே வடிவாய் இருந்த கருமாரித் தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் யாவற்றையும் விரும்பியவண்ணமே அருளும் அன்னையவள் நம் கருமாரி ஆவாள்.

இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கை அமையும். மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன் மக்களைப் பெற்று அன்னைக்குத் தம் வேண்டுதல் காணிக்கையைச் செலுத்தி வருவதனையும் காணலாம். கொடிய, தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

வேண்டிய வரம் அருளும் திருவேற்காடு கருமாரி அம்மன் | Thiruvenkadu Temple

தல வரலாறு 2:

முன்பொரு காலத்தில் சிவபெருமான் சில நாட்களுக்கு கைலாயத்தை விட்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, தான் செய்து வந்த படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழிலையும் அன்னையிடம் ஒப்படைத்து சென்றார்.

ஐயனின் ஆணைப்படி அம்மையும் அகத்தியரிடம் தாம் எழுந்தருள தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி 1. அந்தரக்கன்னி, 2. ஆகாயக்கன்னி, 3. பிரமணக்கன்னி, 4. காமாட்சி, 5. மீனாட்சி, 6. விசாலாட்சி, 7. கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள்.

இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர். வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகமிருந்ததால் வேற்காடு எனப்பெயர் வந்தது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்றதாக சொல்லப்படுவதுண்டு.

பராசக்தியின் அம்சமான கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது. இரண்டாவது உருவம் நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது. நீல நிற உருவத்துடன் மகாவிஷ்ணுவுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார்.

குற்றவாளிகளைத் திருத்தும் திருக்கோளக்குடி கோளபுரீஸ்வரர் திருக்கோவில்

குற்றவாளிகளைத் திருத்தும் திருக்கோளக்குடி கோளபுரீஸ்வரர் திருக்கோவில்

அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து 'அகத்தியரே! நான் உலக மக்களை காப்பதற்காக பாம்பு உருக்கொண்டு புற்றில் அமர்ந்து பல காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன்' என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளை அருளி நம்மை காப்பவள். இவள் சாந்த சொரூபிணியாக சுயம்புவாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ளாள். சுயம்பு மூர்த்தத்துக்கு பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்.

பிராகாரத்தில் இருக்கும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் அழகுடன் காட்சி தருகிறாள். மேலும் இங்குள்ள மரச்சிலை அம்மன் சிறப்பானவள். இவளுக்கு ரூபாய் நோட்டு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இவளை வேண்டினால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.

வேண்டிய வரம் அருளும் திருவேற்காடு கருமாரி அம்மன் | Thiruvenkadu Temple

தல சிறப்புகள்:

'ஈசனின் கட்டளைக்கிணங்க சக்தி ஐந்தொழில்களையும் செய்யும்போது, சூரியன் அன்னையை அவமதித்ததால் அவனைச் சபித்து ஒளி குன்றச் செய்தாள் அம்பிகை. சூரியன் இத்தலத்திற்கு வந்து அம்பிகையைப் பூஜித்து, இழந்த தன் ஒளியைப் பெற்றான்!' என்று தல வரலாறு கூறுகிறது. ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள்.

பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று வேறொரு வரலாறு கூறுகிறது. கோயிலுக்கு எதிரில் திருச்சாம்பல் பொய்கை தீர்த்தம் இருக்கிறது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள்.

அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது. பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். கோயில் முகப்பில் அரசமரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். பால பிரத்யங்கிராவுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு அம்பிகை பால ரூபத்தில், சிம்ம வாகனத்துடன் நின்றிருக்கிறார். கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார்.

இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறார். இவளுக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. அகத்தியர் அன்னையை வேற்காட்டில் போற்றித் துதித்தது ஒரு தை மாத பெளர்ணமியில்தான். ஆகவே, பௌர்ணமி, பூச நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்கள் இங்கு மிகவும் பிரசித்தமானது.

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செல்லவேண்டிய கோயில்கள்

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செல்லவேண்டிய கோயில்கள்

இங்கு தனி சந்நிதியில் மரத்தால் செய்யப்பட்ட அன்னையின் சிலை இருக்கிறது. கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறார். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக விளங்குகிறார்.

அம்மனுக்கு பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது, இவள் அக்னி ஜூவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறார். திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் திருவேற்காடு தலத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள்.

அம்மன், புற்றில் குடியிருந்த இடத்தில்தான் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. புற்று, மஞ்சள் குங்குமம் துலங்க காட்சி அளிக்கிறது. தினமும் மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது. இதனை 'பதி விளக்கு' என்கின்றனர்.

இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமான அமைப்பு. மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கின்றன. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறார். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது.

வேண்டிய வரம் அருளும் திருவேற்காடு கருமாரி அம்மன் | Thiruvenkadu Temple

பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை. அம்பாள் சன்னதி எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்பாள் தலங்களில் திருவிழாவின்போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.

பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோயிலில் பிரசாதமாக தருகின்றனர். புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார். இவர் வலது கையால் ஆசிர்வதித்து, இடது கையை அபய முத்திரையாக வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு. வள்ளலார் சுவாமிகளால், 'தருமமிகு சென்னை' என்று போற்றப்பட்ட சென்னை யில், ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள மூன்று சக்தித் தலங்களை ஒரே நாளில் தரிசித்து அருள்பெறும் விசேஷ வழிபாடுதான் திரிசக்கர தரிசனம் ஆகும்.

திருவேற்காடு ஸ்ரீகருமாரி அம்மன், மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் ஆகிய மூன்று சக்தி ஸ்தலங்களும், சுமார் 12 கி.மீ. தூரத்துக்குள் ஒரே வரிசையில், தரிசித்து பலன் பெறும் வகையில் அமைந்திருக்கின்றன.

இந்த மூன்று சக்திகளின் அருட் கோலங்களைப் பற்றி அகத்தியர் நாடியின் ருத்ர சம்வாத சருக்கப் பகுதியில் கலியுக க்ஷேத்திரப் பரிகார காண்டப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்தியின் மகிமையைக் கூறும் நூல்களில் ரேணுகாதேவியின் திருக்கதையில் ஸ்ரீகருமாரி அம்மன் சிறப்புகளும், ஸ்ரீசண்டிகா வழிபாட்டு முறையில் ஸ்ரீகாமாட்சி அம்மன் மகிமைகளும், தேவி மகாத்மியப் பகுதியில் ஸ்ரீகாத்யாயனி தேவியின் புகழும் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

கேட்கும் வரம் அருளும் குலசை முத்தாரம்மன் கோயில் வரலாறும் சிறப்புகளும்

கேட்கும் வரம் அருளும் குலசை முத்தாரம்மன் கோயில் வரலாறும் சிறப்புகளும்

திருவேற்காடு தலத்துக்கும் குன்றத்தூர் தலத்துக்கும் நெடுங்காலமாகவே ஓர் ஆன்மிகத் தொடர்பு உண்டு, இந்த தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்த அநபாயச் சோழனும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் பாதயாத்திரையாகச் சென்று ஆலயப் பணிகளைச் செய்து வந்ததைக் குறிப்பிடும்படியாக வேதபுரீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் உட்பிராகாரத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்கு எதிரில் தெய்வச் சேக்கிழாரையும் அநபாயச் சோழனையும் சிலையாக வைத்திருக்கிறார்கள். 

திருவிழா:

இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.

தை மாதம் பிரம்மோற்ஸவம், சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, புரட்டாசியில் பெரிய திருவிழா, நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம். ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பிகைக்கு 108 குட அபிஷேகம் நடந்து வீதியுலா செல்கிறாள்.

9ம் ஞாயிற்றுக்கிழமையன்று அம்பாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகிறாள். ஆடி மாதத்தில் இங்கு நடக்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில்களில் திருவிழா அதிகபட்சம் 15 நாட்கள் நடக்கும். அரிதாக சில அம்பாள் கோயில்களில் 48 நாட்கள் வரையில் விழா நடத்துவர்.

ஆனால், இக்கோயிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம் 12 வாரங்கள் நடக்கிறது. மாசி மகத்தன்று அம்பாள் வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று தீர்த்த நீராடுகிறாள். கருமாரியம்மனுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடக்கிறது.

நோய்கள் தீர்க்கும் அம்மன்:

அம்மன் கோயிலில் வழங்கப்படும் சாம்பல் அனைத்து நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. இதனை வாங்கி உண்ணும் பக்தர்கள் எவ்வித நோய் நொடியும் இன்றி வாழ்கின்றனர்.

வழிபாட்டு நேரம்:

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்காக கோயில் திறந்திருக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US