இந்த 2 ராசிகளிடம் பழகும் பொழுது கவனம் வேண்டுமாம்? ஏன் தெரியுமா?
மனிதர்களிடத்தில் கட்டாயமாக ஒருவர் செய்த உதவியும், ஒருவர் நமக்காக கஷ்ட காலங்களில் துணை நின்ற அந்த நிகழ்வையும் எண்ணி நன்றி உணர்வு கொண்டு வாழ வேண்டும். ஆனால் எல்லோரிடத்திலும் இந்த நன்றி உணர்வு இருக்கிறதா என்று கேட்டால் சமயங்களில் அவை காணாமல் போவதை மட்டும் தான் நாம் பார்க்க முடிகிறது.
அவர்கள் நமக்காக திரும்ப ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நாம் உதவியாக இருந்திருக்க மாட்டோம். ஆனால் அவர்கள் அதை மறந்து நாம் யாரோ ஒருவர் போல் சென்றுவிடுவார்கள். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு சமயங்களில் காரணம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் நாம் செய்த உதவியை மறந்து செல்லக்கூடியவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மகரம்:
மகர ராசி பொருத்தவரை அவர்கள் சனிபகவானுடைய ஆதிக்கம் கொண்டவர்கள். இவர்களிடம் அதிக கோபம் வருவதை நாம் காண முடியும். மேலும் மகர ராசியினர் எல்லா விஷயங்களிலும் மிகச் சரியாக செயல்பட வேண்டும் என்ற ஒரு துடிப்பு கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு அவர்களுடைய உணர்வை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் நிறைய சிரமங்கள் இருக்கும்.
மேலும் இயற்கையாகவே இவர்கள் சற்று கடினமான குணம் கொண்டவர்கள் என்பதாலும் எளிதாக இவர்கள் ஒருவரிடத்தில் மனம் விட்டு பேசுவதை தவிர்த்து விடுகிறார்கள். இவர்களுக்கு சக மனிதர்களுடன் எவ்வாறு உணர்வுகளோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் சமயங்களில் சில தடுமாற்றம் ஏற்படுவதால் அவர்களுடைய நன்றியை அவர்கள் மனதிலே வைத்துக்கொண்டு கடந்து விடுவதும் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். இவர்களும் மிகவும் கடினமாக நடந்து கொள்ளக் கூடிய ஒரு மனிதர்கள். அதாவது எளிதில் ஒருவர் மீது பழி சுமத்தி விடக்கூடிய ஒரு ஆற்றலை பெற்றிருப்பார்கள். இவர்கள் அறிவு ரீதியாக மிகவும் பலமானவர்கள். ஆனால் உணர்வு ரீதியாக இவர்கள் நிறைய நேரங்களில் தடுமாற்றத்தை கட்டாயம் சந்தித்து விடுவார்கள்.
இருந்தாலும் இவர்கள் பிறருடைய உணர்வுகளை தன்வசம் படுத்தக்கூடிய ஒரு அற்புத ஆற்றலை பெற்றிருப்பார்கள். சமயங்களில் இவர்கள் பிறரிடம் கடினமாக நடந்து கொள்வதால் இவர்கள் அவ்வளவு மரியாதையோடும் அவ்வளவு அன்பாகவும் நடந்து கொள்ளாத மனிதராக பிறருக்கு தெரியலாம். இதற்கு ராசி அதிபதியும் காரணம். இவர்களுக்கு தங்களுடைய அன்பை கடினமாக தான் வெளிப்படுத்த தெரியுமே தவிர அன்பாக அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |