இந்த 4 ராசியினர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே முடியாதாம்

By Sakthi Raj Sep 09, 2026 07:38 AM GMT
Report

நம்மை சுற்றி இருக்கக்கூடிய ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரியாது. எல்லா சூழ்நிலையிலும் அவர்கள் அமைதியாகவே இருப்பார்கள்.

அன்பை வெளிப்படுத்த மாட்டார்கள், கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள், பேசினால் மட்டுமே அதற்கு பதில் அளிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதற்கு அவர்களுடைய ராசிநாதன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.

அந்த வகையில், எந்த ராசியினர் மனதில் இருப்பதை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது பற்றி பார்ப்போம்.

இந்த 4 ராசியினர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே முடியாதாம் | This 4 Zodiac Never Reveals What They Are Thinking

ஒரு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் இருந்தால் அடைத்து விடலாம்.. எப்படி தெரியுமா?

ஒரு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் இருந்தால் அடைத்து விடலாம்.. எப்படி தெரியுமா?

கடகம்:

இவர்கள் மனதில் உணர்ச்சிகள் அதிகம் இருந்தாலும் அவர்களுக்கு ஒருவரிடம் நம்பிக்கையும் பாதுகாக்கும் கிடைத்த பிறகே மனம் திறந்து பேசுவார்கள். அதை போல் காதலிலும் எந்த ஒரு அவசரமும் காட்ட மாட்டார்கள்.

துலாம்:

இவர்கள் எப்பொழுதும் அன்பை வெளிப்படுத்துவதற்கு முன்பாக மரியாதையையும் அந்த உறவினுடைய நிலைத்த தன்மையையும் முக்கியமாக கவனிக்க கூடியவர்களாக இருப்பார்கள். வார்த்தைகளை விட செயலுக்கு முக்கியம் கொடுப்பதால் அவசரப்பட்டு பேச மாட்டார்கள்.

12 ராசிகளுக்கும் அதிக அளவில் டென்ஷன் கொடுக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

12 ராசிகளுக்கும் அதிக அளவில் டென்ஷன் கொடுக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

தனுசு:

இவர்களை பொறுத்தவரை இவர்கள் சுதந்திரம் மிக முக்கியம் இவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதால் இவர்களுக்கு கட்டுப்பாடு வந்து விடும் என்று நினைப்பதால் மனதில் இருப்பதை எதையும் இவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள்.

மீனம்:

எளிதில் ணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தங்களுடைய உணர்வுகளை யாரேனும் காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று பயந்தும் இவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். மேலும், இவர்கள் காதலில் கற்பனைக்கு அதிக இடம் கொடுப்பவராக இருக்கிறார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US