செப்டம்பர் மாதத்தில் இந்த 4 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப் போகிறதாம்

By Sakthi Raj Aug 31, 2025 06:57 AM GMT
Report

ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மனிதனுடைய வாழ்வே கிரக மாற்றத்தில் தான் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் மாறும் பொழுது 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் அதனுடைய தாக்கம் சென்றடையும்.

அப்படியாக 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் புதன் சிம்ம ராசியில் பெயிற்சியாகிறார். பின்னர் சூரியன் கன்னி ராசியிலும், சுக்கிரன் துலாம் ராசியிலும் அதன் பிறகு புதன் கன்னியிலும் ஆட்சி ஆகிறார். இந்த மாற்றங்கள் கட்டாயமாக 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை உண்டு செய்யும்.

வாழ்க்கையில் மாற்றம் என்பது எதிர்பாராத விதமாக ஒரே நாளில் நடக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் இந்த 4 ராசியினருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாக போகிறது என்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.  

கர்ம வினையை குறைப்பதின் முதல் வழி என்ன தெரியுமா?

கர்ம வினையை குறைப்பதின் முதல் வழி என்ன தெரியுமா?

மேஷம்:

கடந்த சில நாட்களாக மனதில் குழப்பம் கொண்டுள்ள மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு மிக சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது. அதாவது வேலை தொடர்பாக ஒரு முக்கியமான வாய்ப்புகள் வர இருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தை அவர்கள் அற்புதமாக செய்யலாம். இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் மேஷ ராசியினருக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமான நாளாக தான் அமைய போகிறது.

சிம்மம்:

சிம்ம ராசியினர் இந்த செப்டம்பர் மாதத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் மிகச் சிறந்த திருப்பங்களை பெறலாம். வரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டிய காலம் ஆகும். ஆதலால் இந்த செப்டம்பர் மாதம் சிம்ம ராசியினருக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வாய்ப்புகள் அவர்கள் கதவை தட்ட இருக்கிறது. அந்த வாய்ப்புகளை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அடுத்து வரும் நாட்களுக்கு இவர்கள் பயம் கொள்ள தேவை இல்லை.

கன்னி:

கன்னி ராசிங்களுக்கு நீண்ட நாட்களாகவே வெளிநாடு பயணம் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகளுக்கு விடை கிடைப்பது போல் இந்த செப்டம்பர் மாதம் அமைய இருக்கிறது. சொந்தங்கள் வழியாக வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் கிடைக்க உள்ளது. இவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட்டால் கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்புகளை பயன்படுத்தி கனவை நிறைவேற்றி கொள்ளலாம்.

மீனம்:

மீன ராசிகளுக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் கொண்டாட்டம்தான். காரணம் மீன ராசியினருக்கு வழக்கு விஷயங்கள் அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக அமையப்போகிறது. வாழ்க்கையில் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து இருந்த விஷயங்கள் அவர்கள் வீட்டு வாசலில் வந்து கதவை தட்டப் போகிறது. உடல்நிலையில் நல்ல மாற்றமும் சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கபோகின்றது. மேலும் உங்களை எதிர்த்து நின்றவர்கள் உங்களிடம் சரண் அடையக்கூடிய அற்புதமான மாதமாக இந்த செப்டம்பர் மாதம் உள்ளது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்







+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US