2026ல் கட்டாயம் இந்த ராசிகளுக்கு திருமணம் நடக்குமாம்- உங்கள் ராசி உள்ளதா?

Report

திருமணம் என்பது மிகவும் ஒரு புனிதமான பந்தமாகும். கட்டாயமாக எல்லோருக்கும் வாழ்க்கையில் துணை என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அப்படியாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு எந்த ராசியினருக்கு திருமணம் யோகம் இருக்கிறது. எந்த ராசியினர்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு கட்டாயம் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

2026ல் கட்டாயம் இந்த ராசிகளுக்கு திருமணம் நடக்குமாம்- உங்கள் ராசி உள்ளதா? | This 4 Zodiac Signs Will Get Married In 2026 Year 

இவர்களைத்தான் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்குமாம்- யார் தெரியுமா?

இவர்களைத்தான் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்குமாம்- யார் தெரியுமா?

 

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு கட்டாயம் திருமணம் நடக்கக்கூடிய அனைத்து அமைப்புகளும் சிறப்பாக இருக்கிறது. இவர்களுக்கு திருமணம் அல்லாமல் பொருளாதாரத்திலும் இவர்கள் மிகச் சிறந்த நிலையில் உயர்ந்து செல்வார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்குள் கட்டாயமாக திருமணம் தொடர்பான பேச்சுக்கள் ஒரு மிகச்சிறந்த அளவில் ஒரு நல்ல முடிவை பெற்றுக் கொடுக்கும்.

கடகம்:

கடக ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு அவர்கள் நீண்ட நாட்களாக தேடிய வாழ்க்கை துணையை பெற போகிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை துணையை ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்ச்சிகளில் சந்திக்க கூடிய ஒரு அற்புதமான அமைப்பு இவர்களுக்கு இருக்கிறது. மேலும் இவர்களின் வாழ்க்கை துணையால் இவர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள். நிச்சயம் 2026 ஆம் ஆண்டு திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

திருப்பதி கோயிலுக்கு இணையான தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில்

திருப்பதி கோயிலுக்கு இணையான தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில்

கன்னி:

கன்னி ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு ஒரு புதிய தொடக்கமாகவே இருக்கப்போகிறது. காதல் தோல்வியில் இருந்தவர்களுக்கெல்லாம் ஒரு புதிய காதல் மலரக்கூடிய ஒரு அற்புதமான அமைப்பு இருக்கிறது. நீண்ட நாட்கள் திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நினைத்த வரன் அமையும். இந்த வருடம் அவர்கள் கட்டாயமாக திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் திருமணமும் செய்வதற்கான அனைத்து சாத்தியங்களும் பெற்று இருக்கிறார்கள்.

மீனம்:

மீன ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு பொதுவாகவே மிகச் சிறப்பான ஆண்டாக அமையப்போகிறது. இவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கப் போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக வாழ்க்கை துணைக்காக காத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை துணையை சந்தித்து அவர்கள் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாக இந்த 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு அமையப்போகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US