2026 புத்தாண்டில் மிகப்பெரிய ராஜயோகத்தை பெறும் ராசிகள்- உங்கள் ராசி உள்ளதா?
ஜோதிடம் என்பது ஒவ்வொரு கிரக மாற்றங்களை பொறுத்து கணிக்க கூடிய ஒரு பலனாகும். அப்படியாக தற்பொழுது கேது கடக ராசியில் நுழைய உள்ளார். அதே நேரத்தில் குரு பகவான் சிம்ம ராசியில் நுழைகிறார். இதற்கிடையில் சனி பகவான் அவருடைய நட்சத்திரமும் மாற்றும் பெருகிறது. இந்த மாறுதல்கள் எல்லாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் நான்கு ராசியினருக்கு மிகச்சிறந்த பலனை கொடுப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த 2026 புத்தாண்டில் ஒரு மிகச் சிறந்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது. இவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் இவர்களுக்கு நடக்கக்கூடிய ஒரு அற்புதமான அமைப்பு பெறுவார்கள். தொழில் மற்றும் கல்வி ரீதியாக இவர்கள் நினைத்த இடத்தில் இவர்கள் அமரக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த 2026 புத்தாண்டில் அவர்களுடைய தொழில் ரீதியாக நல்ல வருமானத்தை பெறப்போகிறார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் இவர்கள் சரி செய்து சமுதாயத்தில் இவர்களுக்கான மதிப்பை உயர்த்தக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு அமையப் போகிறது. குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தால் அவை அனைத்தும் நல்ல சுமுகமான நிலையில் முடிந்து மகிழ்ச்சி பெறுவார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த 2026 புத்தாண்டு தொடக்கத்திலிருந்து அவர்கள் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு கைகூடி வரக்கூடிய அற்புதமான காலம் ஆகும். தொழிலரீதியாக இவர்கள் நினைத்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் பெறப்போகிறார்கள்.
தனுசு:
தனுசு ராசிக்கு இந்த 2026 புத்தாண்டு தொடக்கத்தில் அவர்கள் வாழ்க்கையில் நிறைய அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர்கள் இந்த ஆண்டு முதல் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கையை பெறப்போகிறார்கள். குடும்பத்தில் இவர்களுடைய மதிப்பு உயரும் பிள்ளைகளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |