எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்?கும்பகோணம் திருக்கோயில்கள்
கும்பகோணம் என்றால் கோயில் மாநகரம் என்றே சொல்லலாம்.அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் எந்தவித தோஷம் இருந்தாலும் அந்த தோஷத்தை போக்கக்கூடிய அனைத்து கோயில்களும் கும்பகோணத்தில் தான் இருக்கிறது.
தோஷ நிவாரணி ஊர் என்றும் சொல்லலாம்.எந்த பக்கம் சென்றாலும் அங்கு ஓர் சிறப்பு வாய்ந்த கோயில்கள் இருக்கிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்?கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும்.
கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி.
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்.
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்.
ஞானம் பெற - சுவாமிமலை.
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்.
எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க - பட்டீஸ்வரம்.
உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.
செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்.
கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்
இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.
திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி.
நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.
மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்
குழந்தைபாக்கியத்திற்கு.இரட்டை லிங்கேஸ்வரர்.சென்னியமங்கலம்.
திப்பிராஜபுரம் பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி.
கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்.
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.
எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்.
நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |