சனியால் பாதிப்பு: நவம்பர் மாதம் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Jul 27, 2024 08:30 AM GMT
Report

சனி பகவான் எப்பொழுதும் ஒன்றை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டால் நமக்கு அதை விட சிறப்பானதாக கொடுப்பார் என்பது ஐதீகம்.

சனிபகவானுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அந்த பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.மேலும் வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். ச

னி பகவானின் இந்த வக்கிர பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்க்கலாம்.

சனியால் பாதிப்பு: நவம்பர் மாதம் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Sanibagavan Sanithisai Rasi Natchathiram

மேஷ ராசி

மேஷ ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். ஆதலால் எதையும் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நன்மையை உண்டாகும்.

எந்த வேலை எடுத்து கொண்டாலும் அதை செய்து முடிக்க சில தடங்கல் ஏற்படலாம்.வியாபாரத்தில் படி படியான முனேற்றத்தை தான் எதிர்பார்க்க முடியும்.

நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் ஏன்? பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதில்

நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம் ஏன்? பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதில்


ரிஷப ராசி

ரிஷப ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார்.

ஆதலால் அலுவலகத்தில் தொழில் செய்யும் இடத்தில பல பாதிப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது.

சிறியதாக செய்யும் முயற்சிகள் கூட பல தடங்களை சந்திக்க நேரிடலாம்.எதிலும் கடுமையான முயற்சியும் கடினமான உழைப்பும் கூட கை கொடுக்காத நிலை ஏற்படலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US