கடுமையான தோஷம் விலக செய்யவேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்
தோஷம் என்பது நம்மை அறியாமல் செய்த தவறால் உண்டாகும் பாதிப்பாகும். அப்படியாக, அந்த தோஷம் விலக நாம் எவ்வளவு மண்டியிட்டு இறைவழிபாடு செய்தாலும், நாம் அதற்கான பரிகாரம் செய்தால் மட்டுமே முழுமையான தீர்வை பெறமுடியும்.
அந்த வகையில், மிக மிக கடுமையான தோஷம் கொண்டவர்கள் செய்யவேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம். தானத்தில் மிக சிறந்த தானம் அன்னதானம். ஒருவரது பசியை போக்குவது என்பது மிக பெரிய புண்ணியமான செயல் என்று வள்ளலார் பெருமான் சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
அன்னதானம் நடக்கும் இடத்தில் அன்பும் அருளும் சுற்றி வரும். தர்ம தேவதை மனம் மகிழ்ந்து அந்த இடம் தேடி வருவாள். அதே போல், பிறரது பசியை போக்குபவர்களை எந்த துயரமும் நெருங்குவதில்லை. அவர்கள் தலை முறை செழித்தோங்கும். எதிரிகளே இருக்கமாட்டார்கள்.
அது மட்டும் அல்லாமல், பிறர் பசியை போக்குபவனை அந்த கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாக்காது என்கிறார்கள்.
ஒருவரது பசி நீங்கி அவர்கள் முகம் மலர்வதை பார்க்க, நம்முடைய உள்ளமும் அகமும் மலரும். மனதில் நம்பிக்கை உதயமாகும். நேர்மறை சிந்தனை வளரும். ஒருவரது கொடிய நோய் பசி. அந்த பசியதானது ஒரு மனிதனின் அறிவை மங்க செய்கிறது.
ஏழைகளை வாட்டி வதைக்கும் அந்த பசியை போக்குபவனின் உயிர் அந்த ஆண்டவனை நெருங்கி செல்கிறது. அதோடு, அனைத்து தேவர்களின் ஆசீர்வாதமும் அருளும் கிடைக்கிறது. அவர்கள் தெரியாமல் செய்த பாவங்கள் தானாகவே விலகி செல்கிறது.
ஆக, நம்முடைய வீடுகளில் விஷேசம் என்றால், வந்தவர்களை கவனிக்கும் கையோடு, பசியால் வாடுபவர்ககையும் கவனித்து உணவளிக்க இறுதி காலம் வரை நாம் செய்த தர்மம் உடன் நிற்கும். நாம் செய்யும் அந்த தானம் நம் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |