கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் வழிபாடு

By Sakthi Raj Jul 23, 2024 10:00 AM GMT
Report

கால பைரவர் சிவபெருமானின் அம்சம் ஆவார்.அவரை வழிபட மனதில் தைரியமும் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.அதை பற்றி பார்ப்போம்.

அதாவது ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது.

சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் வழிபாடு | Thoshangal Kalabairavar Ramar Worship

வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும்.

கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக ஐதீகம்.

ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் அன்று எவ்வாறு வழிபடவேண்டும்?

ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் அன்று எவ்வாறு வழிபடவேண்டும்?


ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.

எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US