திருச்சூர் பூரம் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயர்நீதிமன்றம்
கேரளாவின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான திருச்சூர் பூரம் திருவிழா உலக பிரசித்த பெற்றதாகும்.
திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இரண்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இவ்விழாவில் யானைகள் அணிவகுப்பு, வாண வேடிக்கை என சுமார் 36 மணிநேரத்துக்கும் அதிகமாக நீடிக்கும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
2024ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி இவ்விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
அதில், யானைகளுக்கும், பக்தர்களுக்கும் இடையே சுமார் 6 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் யானைகளை பூரம் திருவிழாவிற்கு அழைத்து வரும் போது தீப்பந்தங்கள் எடுப்பது, செண்ட மேளம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்படுள்ளது.
இதற்கு முன்னதாக யானைகளின் உடல்நலன் பரிசோதிக்கப்பட்டு இவ்வறிக்கையை முன்னதாக சமர்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உடற்தகுதி இல்லாத யானைகளை ஊர்வலத்தில் பயன்படுத்தக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.