காய்ந்த துளசி அகற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
துளசி மகாலட்சுமிக்கு உகந்தது.மேலும் ஒருவர் வீட்டில் துளசி செடி வளர்ப்பதால் புண்ணியம் சேரும். துளசி வீட்டில் வளர்த்தால் அதை நன்றாக பராமரிப்பது அவசியம்.
ஒரு வேளை அந்த துளசி காய்ந்து போனால் என்ன செய்ய வேண்டும் எப்படி அகற்ற வேண்டும் என்று பார்ப்போம்.
நம் வீட்டில் காய்ந்த துளசி இருந்தால் அதை உடனே அகற்றி விடுவது நல்லது.
ஏன் என்றால் அந்த துளசி எதிர்மறை எண்ணங்களை கொடுக்க கூடும்.மேலும் அத்துளசியை அகற்றிய பிறகு அந்த இடத்தில வேறு ஒரு செடியை நட்டு வைப்பது நன்மையை தரும்.
ஒருவர் துளசி காய்ந்து போனால் அதை ஒரு போதும் எரிக்கா கூடாது.அதற்க்கு பதிலாக துளசியை பூமியில் புதைப்பது நன்மையை தரும்.
வீட்டில் துளசியை வளர்க்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
துளசி செடியின் இலைகளை தேவைப்படும் போது மட்டுமே பறிக்க வேண்டும் . இரவில் தவறுதலாக கூட துளசி இலைகளை பறிக்க கூடாது.மேலும் ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியில் துளசி இலைகளை வெட்டுவது நல்லதல்ல.
துளசி புனிதமானது. அதனால்தான் துளசி செடியை தரையில் வைக்காமல் தொட்டியில் வைக்கிறார்கள். துளசி எப்போதும் உயரமாக இருக்க வேண்டும்.
மேலும் செடியைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.துளசி செடி முன் தினமும் வழிபாடு செய்து தீபம் ஏற்ற வேண்டும். அப்போது லக்ஷ்மி தேவியின் அருகே நமக்கு கிடைக்கும்.
துளசி செடியை தவறாமல் வணங்கி வந்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதி நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |