துளசி மாலை அணிவது ஏன் தெரியுமா?
இந்து மதத்தில் மிக புனிதமானது துளசியாகும்.
பெருமாளுக்கு எத்தனை பொருட்களை நாம் அணிவித்தாலும், அவர் முதலில் ஏற்றுக் கொள்வது துளசியை தான்.
துளசி இல்லாமல் மகாவிஷ்ணுவிற்கு செய்யப்படும் எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது என்பது ஐதீகம்.
அந்தவகையில், துளசிக்கு இணையான புனிதத்தன்மை கொண்ட து துளசி மாலை.
கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான், விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.
பூச்சிகள் நுழையாமல் தடுக்க வீட்டின் பின்புறத்தில் துளசி மாடம் வைத்து அதனை வழி பட்டார்கள். தற்போதும் இந்த முறை பல வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணுவின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும்.
வீட்டின் தென் மேற்கு பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும்.
துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோல மிட்டு வழிபட்டு வந்தால், நல்லது.
துளசி மாலையை விஷ்ணுவுக்கு அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |