வியாழக்கிழமை சாய் பாபாவை எப்படி வழிபடவேண்டும்

By Sakthi Raj Jun 13, 2024 11:00 AM GMT
Report

'சாய்பாபா' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தம்.சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

குழந்தை இல்லாதவர்கள் திருமண தாமதம் என வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் சாய் பாபாவை வழிபட அவர் அந்த பிரச்சனையை தீர்த்து கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிகை.

அப்படியாக சாய் பாபா வழி படும் பொழுது நாம் வியாழன் அன்று சொல்ல வேண்டிய சாய் பாபா மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.

1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத்.

தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை சாய் பாபாவை எப்படி வழிபடவேண்டும் | Thursday Saibaba Prayer Tharisanam Sai Namam News

2. ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:

பத்ரி க்ராம ஸமத் புதம் த்வாரகா மாயீ வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் ஸாயி நாதம் நமாமி.

3. ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:

"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
4. சாயிநாதர் திருவடி ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US