புதிய வீடு மாறுபவர்கள் கவனத்திற்கு-மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்
பொதுவாக தை மாதம் என்பது மங்களகரமான மாதம் ஆகும்.இந்த மாதத்தில் பலரும் தங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.அதிலும் முக்கியமாக பலரும் புதிய வீடு கட்டி குடியேறுவார்கள்.அவ்வாறு புது வீடு மாறும் பொழுது நாம் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.அதை கடைபிடித்தால் நாம் புது வீட்டில் நிதி நெருக்கடிகள் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.
அப்படியாக நாம் இப்பொழுது புது வீடு மாற்றும் பொழுது செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். புது வீடும் மாறும் பொழுது வீட்டில் உள்ள பொருட்கள் எடுக்கும் முன் முதலில் எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்துக் கொண்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
அதோடு சாம்பிராணி ஏற்றி குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்யவேண்டும்.அதாவது நாம் குடி இருந்த வீட்டில் இருந்த மகிழ்ச்சி,பொருளாதாரம் எல்லாம் அதிர்ஷடம் எல்லாம் புது வீடு புகும் பொழுது நம்முடன் வரவேண்டும் என்று மனதார பிராத்தனை செய்து கொள்ளவேண்டும்.
இந்த வீட்டில் இருந்து எங்களுக்கு அருள் புரிந்த குலதெய்வமும் இஷ்ட தெய்வமும் எங்களுடன் புது வீட்டிற்கு வருகை தந்து அருள் புரியவேண்டும் என்று வழிபாடு செய்யவேண்டும்.வழிபட்ட பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே எடுத்துச் சென்று புதிதாக குடியேற உள்ள வீட்டின் பூஜை அறையில் கொண்டு போய் வைக்க வேண்டும்.
மேலும் சிலரது வீடுகளில் புனித யாத்திரை சென்று தீர்த்தங்கள் வைத்திருப்பார்கள்.அவ்வாறு காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களில் இருந்து கொண்டு வந்த தீர்த்தம் வீட்டில் இருந்தால் முதலில் அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிவித்து, சுத்தப்படுத்திய பிறகு விளக்கேற்றி, சாமி கும்பிட்டு, பால் காய்ச்சல் வேண்டும்.
அதற்கு பிறகு தான் ஏற்கனவே குடியிருக்கும் வீட்டில் இருந்து பொருட்களை எடுக்க வேண்டும். அதன் பிறகே நம் வீட்டில் உள்ள பிற பொருட்களை எடுத்து வைக்க வேண்டும். மேலும் புது வீட்டிற்கு செல்லும் பொழுது மனதார நம்முடைய தெய்வங்கள் அனைவரையும் வழிபாடு செய்த பிறகே உள் ளே செல்ல வேண்டும்.அவ்வாறு செல்ல நம்முடைய நேர்மறை ஆற்றல் வீட்டை சூழ்ந்து நமக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |