திருச்செந்தூர் முருகன் கோவிலின் இந்த மாத உண்டியல் காணிக்கை.., எத்தனை கோடி?
முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் சிறப்புப் பெற்ற தலமாக திருச்செந்தூர் விளங்குகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற எண்ணிக்கையில் மொத்தமாக 5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளன.
மேலும், உண்டியல்களில் இருந்து 1,905 கிராம் தங்கம், 72,255 கிராம் வெள்ளி மற்றும் 1,922 வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்துள்ளன.
அண்மைக்காலத்தில் உண்டியல் மூலம் கிடைத்த வருமானத்தில், இம்மாத உண்டியல் வருமானம் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







