திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா கோலாகலம்
ருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தை உத்திர வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நேற்று அதிகாலை 3 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபத் தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
முதலில் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமானத் தளத்திற்கு மேளதாளங்கள் முழங்கக் கொண்டுவரப்பட்டு, சரியாகக் காலை 9.30 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சண்முகர் விமானக் கலசத்திற்கும், பெருமாள் ஆகிய விமானக் கலசத்திற்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மாலை 4 மணிக்குச் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |