நேரலை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2வது வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும். இங்கு உலகம் எங்கிலும் இருந்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருவதுண்டு. இங்கு வந்து என்ன வேண்டுதல் வைகின்றமோ அவை முருகன் அருளால் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அப்படியாக, இக்கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அதையடுத்து சுமார் 16 வருடங்கள் கழித்து இன்று(07-07-2025) திங்கட்கிழமை அன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைப்பெறுகிறது.
இதற்காக கோயிலில் பல்வேறு திருபணிகள் செய்யப்பட்டு கடந்த 27 ஆம் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து இன்று காலை 6.05 மணிக்கு தொடங்கி 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் நேரத்தில், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அப்படியாக, திருச்செந்தூரில் நடக்கும் மகா கும்பாபிஷேகத்தை எளிமையாயக காணும் வகையில் ஐபிசி தமிழ் நேரலை ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார்கள். அதை குடும்பத்துடன் பார்த்து இறைவனின் அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |