திருக்கார்த்திகை 2024:பக்தி முழக்கத்துடன் ஏற்ற பட்ட பரணி தீபம்
கார்த்திகை மாதம் என்றாலே சிறந்த மாதம் ஆகும்.அந்த மாதத்தில் தான் பவுர்ணமி திதியும்,கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை தான் திருக்கார்த்திகை என்போம்.அந்த திருக்கார்த்திகை திருநாள் அன்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற படும்.
அதில் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த தீபத்தை தரிசனம் செய்பவர்களுக்கு பல கோடி புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.மேலும் மாலை மகா தீபம் ஏற்றுவதற்கு முன்பாக காலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள்.
அதாவது இந்த பரணி தீபம் ஆனது அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.அதனைத்தொடர்ந்து, ஏகன் அனேகனாகவும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக, அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்பு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
பரணி தீபம் ஏற்றியதை தொடர்ந்து பரணி தீபத்தினை, சிவாச்சாரியர்கள் கோயில் உட் பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று, கோயிலில் உள்ள அம்மன், விநாயகர், முருகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு பரணி தீபத்தினை ஏற்றியுள்ளனர்.
இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அண்ணமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்துள்ளனர்.அந்த திருக்கார்த்திகை திருநாள் நிகழ்ச்சியின் முழு காணொளியை நாம் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |