நாம் பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத 6 விஷயங்கள்

By Sakthi Raj Dec 13, 2024 07:11 AM GMT
Report

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சில முக்கியமான விஷயங்களை நம்மிடமே வைத்து கொள்ள வேண்டும்.காரணம் எல்லோரும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்க மாட்டார்கள்.ஒருவர் நேர்மறை எண்ணங்கள் கொண்டு இருந்தால் சிலர் எதிர்மறை எண்ணங்கள் கொண்டு இருப்பார்கள்.

ஆனால் உண்மையில் நாம் யார் எப்படி என்று கண்டு பிடிக்க முடியாது.அப்படியாக நாம் மனதார நினைக்கும் காரியம் நடக்கவேண்டும் என்றால் பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத 6 விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1.இறைவனுக்கும் நமக்கும் இருக்கின்ற பந்தத்தை யாரிடமும் சொல்ல கூடாது.அதே போல் நாம் இறைவனிடம் மனதார வைக்கும் வேண்டுதலையும் பிறரிடம் ஒருபொழுதும் பகிர்ந்து கொள்ள கூடாது.நம்முடைய இறை அனுபவம் முழுவதையும் பிறரிடம் சொல்வதும் கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது அதில் இருக்கும் தாக்கம் குறைந்து சாதாரண விஷயமாக மாறிவிடும்.

2.மேலும் நாம் ஒருவருக்கு தானம் செய்வது என்பது பிறர் அறிய செய்யலாம்.ஆனால் தர்மம் பிறர் துன்பத்தை உணர்ந்து அவர்கள் கேட்காமல் நாம் கொடுப்பது.அதை ஒரு பொழுதும் பிறரிடம் பகிர கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது அதற்கான பலன் கிடைக்காமல் போயிவிடும்.

சனி பெயர்ச்சி 2025:சனி பகவான் அருளால் ராஜ வாழ்க்கை யாருக்கு?

சனி பெயர்ச்சி 2025:சனி பகவான் அருளால் ராஜ வாழ்க்கை யாருக்கு?

3.திருமணம் ஆன பெண்கள் தங்கள் கர்ப்பமான விஷயத்தை 5 மாதம் முடியும் வரை யாரிடமும் சொல்ல கூடாது.காரணம் முதல் 5 மாதங்கள் பல கண் திருஷ்டி உருவாகும்.ஆதலால் உடல் நிலையில் சில சங்கடங்கள் சந்திக்க நேரிடலாம்.ஆக 5 மாதம் கழித்து சொல்வதே சிறந்த பலன் கொடுக்கும்.

4.நாம் எதிர்காலத்திற்காக போட்டு வைத்திருக்கும் திட்டத்தை முன்னதாகேவ பிறரிடம் சொல்ல கூடாது.காரியம் உறுதி ஆன பிறகு சொல்வதே சிறந்தது.அவ்வாறு செய்யும் பொழுது காரிய வெற்றி கிடைக்கும்.

5.உலகத்தில் தீய செயலில் முக்கியமான செயல் பிறரிடம் பொய் சொல்லுதல்.நாம் எந்த காரணத்தை கொண்டும் பிறரிடம் தேவை இல்லாத பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும்.பொய் சொல்லுவதால் மனம் பலவீனம் ஆகும்.நாம் தைரியமாக செயல்பட முடியாது.

6.ஒரு மனிதனுக்கு மிக தேவை பணம்.நாம் எந்த சூழ்நிலையிலும் நாம் உழைத்து சம்பாதிக்கும் வருமானத்தை பிறரிடம் சொல்ல கூடாது.எல்லோருடைய கண்களும் ஒரே மாதிரியாக இருக்காது.பொறாமை குணங்கள் கொண்டதாக இருக்கும்.ஆக வருமானம் சொல்லுவதை தவிர்க்க வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US