உலகின் முதல் நடராஜர் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் மிக முக்கியமான மாவட்டமாக திகழ்கிறது.திருநெல்வேலி என்றால் தாமிரபரணி மற்றும் அல்வா இவை இரண்டிற்கும் மிகவும் பிரபலம்.ஆனால் அதையும் தாண்டி திருநெல்வேலி ஒரு ஆன்மீக பூமி என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டின் மிக முக்கிய சிறப்பு வாய்ந்த கோயில்கள் இந்த திருநெல்வேலியில் அமைய பெற்று இருக்கிறது.கண்டிப்பாக திருநெல்வேலி சென்றால் மறக்காமல் இந்த கோயில்களை தரிசித்து வர வாழ்க்கையில் நல்லதோர் மாற்றம் நடக்கும்.அப்படியாக இப்பொழுது திருநெல்வேலி சென்றால் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கியமான கோயில்களை பற்றி பார்ப்போம்.
1.அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,திருநெல்வேலி
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற மிக முக்கியமான கோயிலாக நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் கோயில் விளங்குகிறது.இக்கோயில் மிகவும் பழமையான கோயில் ஆகும்.இக்கோயிலின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இங்கு அருள்பாலிக்கும் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜ கோபுரமும் அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது.
இரண்டு சன்னிதியை இணைக்கும் சங்கிலியாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு தனித்தனி கோவில் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோயிலாக திகழ்வது இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும்.மேலும் இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகில் ஒரு தனி சன்னிதியில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
அதுமட்டும் அல்லாமல் பெருமாள் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சிகளும் இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருப்பது பார்ப்பதற்கு ஆச்சரியம்.
மேலும் பெருமாள் தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் இந்த இடத்தில் இருக்கிறது. பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருவார் ஆனால் இந்த கோவிலில் மட்டும் தனிச்சிறப்பாக வடக்கு பக்கம் நோக்கி காட்சி தருகின்றார்.
மேலும் கல்விக்கு கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த வந்து வழிபாடு செய்ய படிப்பில் சிறந்து விளங்குவதோடு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் திருமண ஆகாத பெண்கள் காந்திமதி அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து பூஜை செய்ய விரைவில் திருமணம் கைகூடும் மேலும் கணவன் மனைவி பந்தம் ஒற்றுமையாக நீடிக்கும் என்பது நம்பிக்கை.
இடம்
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி 627 001. திருநெல்வேலி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 05.30 முதல் 12.00 மாலை 04.00 முதல் 09.00 வரை
2.அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில்-செப்பறை
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் என்னும் அழகிய கிராமத்தில் இக்கோயில் அமைந்து உள்ளது.இது ஒரு நடராஜர் கோயில் ஆகும்.மேலும் செப்பறை கோயில் நடராஜர் சிலை தான் உலகின் முதல் நடராஜர் சிலையாக சொல்லப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூலவரான 'வேண்ட வளர்ந்தநாதர்" சுயம்பு மூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே 'நெல்லையப்பர்" எனப்படுகிறார்.கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித்தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து விசேஷ காலங்களில் அலங்காரம் செய்யப்படும்.
இக்கோயில் அமைய பெற்று இருக்கும் பார்ப்பதற்கே இயற்க்கை காட்சியோடு அழகான தோற்றம் அளிக்கும்.அதாவது நடராஜர் தாமிரசபையில் இது முதல் தாமிர சபை ஆகும்.இங்கு தேரோட்டம் மிக விஷேசமாக நடைபெறும்.
ஆனி தேர்த்திருவிழாவுடன் கூடிய அழகிய கூத்தர் திருவீதி உலா வரும் வைபவமும் மிகவும் சிறப்பு.ஆற்றுக்கு அருகில் அமைய பெற்று இருப்பதால் கோயிலுக்கு வருபவர்கள் அந்த ஆற்று சூழலையும் ரசித்து மகிழலாம்.கலைகளில் சிறந்து விளங்க இங்கு உள்ள நடராஜரை வழிபாடு செய்ய குழந்தைகள் கலைத்துறையில் ஜொலித்து மின்னுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் திருமணம் ஆகாத பெண்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வேண்டி கொள்ள விரைவில் நல்ல மணமகன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
இடம்
அருள்மிகு நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில், செப்பறை, திருநெல்வேலி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
3.அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோயில்
பொதுவாகவே முருகன் அவனை பார்த்தாலே நின்று பார்த்து கொண்டே இருக்கலாம் அது முருகப்பெருமானின் சிறப்பு.முருகன் ஓர் பார்வையில் நம்முடன் பேசுவது போல் இருக்கும். முருகன் கோயில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.
அப்படியாக எப்பொழுதும் மிகவும் கூட்டம் நெரிசலான வீதியில் கோயில் அமைந்து இருப்பதால் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது கோயில் மிக பரபரப்பாய் காணப்படும்.ஆனால் கோயில் உள் சென்று முருகனை பார்த்த நொடி பொழுதில் நம்மை மறந்து உலகம் மறந்து அவரோடு ஐக்கியம் ஆவது போல் உணர்வு உண்டாக்கிறார்.
நெல்லையில் ஜங்ஷன் கடை ரத விதிகளில் அழகாய் விற்று இருக்கும் முருக பெருமானை நெல்லை சாலை குமார சுவாமி என்று அழைக்கின்றனர்.மற்ற முருகன் கோவில்களில் மூலவரான சண்முப்பெருமான் தெற்கு நோக்கி அமைந்து இருப்பார்.
ஆனால் இந்த கோவிலில் மூலவரான சண்முகர் கிழக்கு நோக்கி ஆறுமுகத்துடனும்,பன்னிரு கைகளுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அமைந்து இருப்பது விசேஷமான ஒன்றாகும்.இந்தத் திருத்தலம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையான ஸ்தலம் என்பதால், இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் இங்கு நடைபெறும் பூஜைகள், விழாக்கள் அனைத்து அதைப்போன்றே அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து இந்த முருகப் பெருமானை வேண்டி சென்றால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மேலும் நம் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து விடுபட நிச்சியம் ஒரு முறையாவது நெல்லை சாலை குமார சுவாமியை தரிசிக்க மன கூச்சல்கள் குறைந்து மனம் லேசாவதை பார்க்கமுடியும்.
இடம்
பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோயில், ஜங்ஷன்,திருநெல்வேலி - 627001, திருநெல்வேலி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
4.வீரவநல்லூர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் வீரவநல்லூர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலும் ஒன்று.இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில் ஆகும்.நாம் அனைவரும் வீரபாண்டி கட்டபொம்மன் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.
அவர் எப்பொழுதுமே தனது படை வீரர்களுடன் இக்கோயிலுக்குச் சென்று, ஒவ்வொரு போருக்கு முன்பும் சுந்தர்ராஜனிடம் ஆசிர்வாதம் பெற்று, வீரப் பிரமாணம் செய்து கொள்வதாகத் சொல்லப்படுகிறது.இங்கு சுந்தரராஜப் பெருமாள் பகவான் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இக்கோயிலில் நவநீத கிருஷ்ணன்,பன்னிரு ஆழவார்கள்,ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகர் மற்றும் ஸ்ரீ சேனை முதலி ஆகியோருக்கு தனி சந்நிதி உள்ளது.
இடம்
வீரவநல்லூர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், வீரவநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்- 627426
வழிபாட்டு நேரம்
காலை 7.00 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை
5.வரம் தரும் பெருமாள்-தச்சநல்லூர்
கேட்டதை கொடுப்பவர் கிருஷ்ணர்.அப்படியாக கேட்ட வரத்தை உடனே அருளுகிறார் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள "வரம் தரும் பெருமாள்". இத்திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமையானது.இக்கோயில் இந்த ஊரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.
மேலும் நம் இந்த கோயிலுக்கு சென்று சுவாமியிடம் மனம் உருகி கேட்க அதை உடனே நடத்தி கொடுப்பதாக பக்தர்கள் சொல்கின்றனர்.இக்கோயில் அதிக வெளியூர் மக்களுக்கு தெரிவதில்லை.சிறிய கோயிலாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாகும்.
இக்கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும்.அதாவது கி.பி 1734 ம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மர் எனும் அரசராலும் பராமரிக்க பட்டு பினனர் வல்லப மங்களத்து அரசராலும் பராமரிக்கப்பட்டுள்ளது.
குலசேகர பாண்டிய மன்னர் இக்கோவிலை சிறப்பாக பராமரிக்கும் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.பிறகு கி.பி 16 ம் நுாற்றாணடில் சுந்தரபாண்டிய மன்னர் மதுரை திருமலை நாயக்க மன்னராலும் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மதுரையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு முன் அந்த நிகழ்வுகள் வெற்றிகரமாக அமைய இங்கு வந்து மன்னர்கள் வழிபட்டார்கள் என்று இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.திருநெல்வேலி செல்வபவர்கள் நிச்சயமாக பெருமாள் பக்தராக இருந்தால் தவறாமல் இந்த வரம் தரும் பெருமாளை தரிசிப்பது வாழ்நாளில் நல்ல பலன்களை தரும்
இடம்
வரம் தரும் பெருமாள்,பெருமாள் கோயில் தெரு, தச்சநல்லூர், திருநெல்வேலி
வழிபாட்டு நேரம்
காலை 8.00 மணி முதல் 11 மணி வரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |