திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா
திருச்சியில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம்.
கல்யாண பரிகாரத் தலம் என்று போற்றப்படும் இந்த ஆலயத்துக்கு, அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் என மூவரும் வந்து தேவாரம் பாடி உள்ளனர்.
அப்பர் பெருமான், இந்தத் தலத்துக்கு வந்த போது வெயிலினாலும் கடும் பசியினாலும் களைப்புற்று சோர்ந்து போனார்.
அப்போது அப்பருக்கு அவரது களைப்பு தீர, சிவபெருமானே வந்து, பொதி சோறு எனப்படும் கட்டமுது வழங்கி பசியாற்றிய விழா கட்டமுது பெருவிழா.
அப்பர் பெருமான், ஞீலி வனேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கோயிலிலிருந்து அப்பர் கட்டமுது வழங்கிய இடத்திற்கு கயிலாய வாத்தியங்கள் முழங்க சென்றடைந்தது.
தொடர்ந்து, திருமுறைகள் பாடப்பட்டு அப்பர் பெருமானுக்கு கட்டமுது வழங்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |