ஆவணி மூலத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் மதுரைக்கு புறப்பாடு

By Yashini Sep 11, 2024 06:30 AM GMT
Report

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30ஆம் திககி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 13ஆம் திகதி பிட்டுத் தோப்பில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடக்கிறது.

இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் எழுந்தருளுவது விசேஷமாகும்.

அதன்படி நாளை காலை 8.30 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முருகன் புறப்பட்டு வருகிறார்.

ஆவணி மூலத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் மதுரைக்கு புறப்பாடு | Tiruparangunram Muruga Leaves For Madurai Tomorrow

திருப்பரங்குன்றம், பசுமலை, பழங்காநத்தம் வழியாக மதுரைக்கு வருகை தரும் முருகப்பெருமானை வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்று வழிபடுகிறார்கள். 

பிட்டு தோப்பில் 13ஆம் தேதி நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலில் முருகப்பெருமான் பாண்டிய மன்னனாக பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வருகிற 17ஆம் திகதி மதியம் வரை மதுரையில் தங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

இதை தொடர்ந்து அன்று மாலை 4 மணிக்கு மேல் மதுரையில் இருந்து மீண்டும் திருப்பரங்குன்றத்திற்கு பூப்பல்லக்கில் முருகப்பெருமான் புறப்படுகிறார்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US