திருப்பரங்குன்றம் மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா

By Yashini Sep 24, 2024 06:55 AM GMT
Report

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் உள்ளது.

இந்த கோவில் வளாகத்தில் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமான் தனி சன்னதியும் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா | Tiruparangunram Picking The Vine For Kumaran

அந்தவகையில், இந்த ஆண்டிற்கான மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா வருகின்ற 27ஆம் திகதி நடக்கிறது.

அன்று காலை 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்க வேலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

பின்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதற்கடுத்து முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்த குளத்தில் அந்த வேலுக்கு பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா | Tiruparangunram Picking The Vine For Kumaran

இதனைதொடர்ந்து மலை மேல் குமரருக்கும், வேலுக்குமாக அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது.

பின் மாலையில் மலை உச்சியில் இருந்து வேல் எடுத்து வந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சகல பூஜையும், சர்வ அலங்காரமும் தீபாராதனையும் நடக்கிறது.

இதனை தொடர்ந்து இரவில் பூப்பல்லக்கில் வேல் எடுத்து நகர்வலம் சென்று இருப்பிடம் அடைகிறது.         

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US