திருமலை திருப்பதியில் மார்கழி அதிகாலை சுப்ரபாதம் கிடையாது-காரணம் தெரியுமா?
திருமலை திருப்பதியில் பெருமாள் ஓய்வெடுக்காமல் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருபவர்.அப்படியாக அங்கு வருடம் முழுவதும் அதிகாலை பெருமாளுக்கே உரிய சுப்ரபாதம் சேவை நடைபெறுவது வழக்கம்.ஆனால் வருடத்தில் 30 நாள் மட்டும் அவை நிறுத்தப்படுகிறது.
காரணம் கண்ணனுக்காக அர்ப்பணித்த ஆண்டாள் பக்தியின் வெளிப்பாட்டாக பாடிய பாசுரங்கள் ஒளிக்கப்படுகிறது. அதாவது வைணவத்தில் உள்ள 12 ஆழ்வார்கள் தங்களை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் வைத்து பாசுரங்கள் பாடினாலும் ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால் தன்னை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் பாவித்து பாடிய பாசுரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட ஆண்டாள்,கண்ணனிடம் தீராத அன்பும் பக்தியும் கொண்டு பிறகு அந்த கண்ணனையே தான் மணக்க வேண்டும் விரும்பினாள்.அந்த பிடிவாத அன்பினால் பெரியாழ்வார் வடபத்ரசாயிக்கு அணிவிக்க தொடுக்கும் மாலையை அவர் அறியாமல் சூடிப்பார்த்து அழகு பார்த்தாள்.
அவள் சூடிய மாலையே பிறகு வடபத்ரசாயிக்கு அணிவிக்கப்பட்டது. அப்படியாக தன்னுடைய மனம் கவர்ந்த கண்ணனையே கணவனாக அமையவேண்டும் என்று மார்கழி மாதம் முழுவதும் பாவை நோன்பு மேற்கொண்டு பாசுரங்கள் பாடி வழிபட்டாள்.
ஆண்டாள் விரும்பியபடி அந்த பரந்தாமனும் ஐக்கியமாகிவிட்டாள்.ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் சூடுவேன்’ என பெருமாள் விரும்பி ஏற்றுக்கொண்டதால் ஆண்டாளை சிறப்பிக்கும் விதமாக மார்கழியில் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடல்களைக் கேட்டு பெருமாள் துயில் எழுகிறார்.
ஆக ஒருவர் நினைத்தது நடக்கவேண்டும் என்றால் இந்த மார்கழி மாதம் போல் சிறந்த மாதம் எதுவும் இல்லை.அந்த மாதத்தில் ஆண்டாள் அருளிச்செய்த பாசுரத்தை பாடி வழிபடுவதால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் அந்த மாதம் முடியும் முன் நடப்பதை காணமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |