திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத தரிசன டிக்கெட்! வெளியீடு திகதி அறிவிப்பு

By Sathya Mar 18, 2024 11:20 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத தரிசனத்துக்கான ஓன்லைன் டிக்கெட் வெளியீடு திகதியை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

300 ரூபாய் தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்கான ஜூன் மாத 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரும் 25 -ம் திகதி காலை 10 மணிக்கு ஓன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

tirupati june month 2024 tickets releasing-date

கட்டண சேவை டிக்கட்டுகள்

ஓன்லைனில் நடத்தப்படும் குலுக்கள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் கட்டண சேவை டிக்கட்டுகளை இன்று காலை 10 மணி முதல் 20 -ம் திகதி காலை 10 மணி வரை முன்பதிவு முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் டிக்கெட் கிடைக்க பெற்ற பக்தர்களுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பப்படும். அவர்கள் இந்த மாதம் 22 -ம் திகதி மதியம் 2 மணிக்கு கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

tirupati june month 2024 tickets releasing-date

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வரும் 21 -ம் திகதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

ஜேஸ்டாபிஷேகம் டிக்கெட்டுகள் வரும் 21 -ம் திகதி காலை 10 மணிக்கு ஓன்லைனில் வெளியிடப்படும்.

மேலும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீபா அலங்கார சேவைகளை வீட்டில் இருந்து மெய்நிகர் அடிப்படையில் வழிபட விரும்பும் பக்தர்கள் வரும் 21 -ம் திகதி மாலை 3 மணிக்கு ஓன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

tirupati june month 2024 tickets releasing-date

ஜூன் மாதத்திற்கான அங்கப்பிரதட்சன டோக்கன்கள் வரும் 23 -ம் திகதி காலை 10 மணிக்கு ஓன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் ஆகியவை வரும் 23 -ம் திகதி பகல் 11 மணிக்கு ஓன்லைனில் வெளியிடப்படும்.

திருப்பதி திருமலை ஆகிய ஊர்களில் உள்ள தேவஸ்தானத்தின் அறைகளில் ஜூன் மாதம் தங்குவதற்கு வரும் 25 -ம் திகதி மாலை 3 மணி முதல் ஓன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவா அமைப்பின் கீழ் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் 27- ம் திகதி காலை 11 மணிக்கு முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நவநீத சேவா திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் அன்றைய தினம் 12 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.          

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US