திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அற்புதமான செய்தி - இனி இந்த கவலை வேண்டாம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக புகழ்பெற்றது. இங்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பெருமாளின் அருள் பெற வருகை தருகிறார்கள். அப்படியாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அவ்வப்போது சில சங்கடங்களை சந்திக்க நேருகிறது.
அதாவது அதிக அளவில் பக்தர்கள் வருவதால் சமயங்களில் தங்கும் அறைகள் சிலருக்கு கிடைப்பதில்லை. இந்த பிரச்சனையை உணர்ந்து தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் வசதிகளை எண்ணி பி எஸ் 5 என்ற பெயரில் ஐந்தாவது மகா மண்டபம் கட்டுமான பணியை 102 கோடி மதிப்பீட்டு செய்து வருகிறார்கள்.
பி எஸ் 5 மகா மண்டபம் கட்டுமான பணிகள் சுமார் 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் திருப்பதி மலையில் நடைபெறும் பிரம்மோற்சவ துவக்க நாள்நாள் அன்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அந்த மண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.
மேலும் இந்த மண்டபமானது 2500 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த மண்டபத்தில் 216 கழிவறைகள், 216 குளியில் அறைகள் தலைமுடி சமர்ப்பிக்கும் மண்டபங்கள் இரண்டு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாக சொல்கிறார்கள். அதேபோல் ஒரே நேரத்தில் 1400 பக்தர்கள் உணவு அருந்தும் வகையில் இலவச உணவு சாப்பிட தேவையான வசதியும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







