திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை

By Sakthi Raj May 24, 2024 05:00 AM GMT
Report

 திருமாலை வழிபடும் வைணவ தலங்களில் முக்கியமானது, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். நம் நாட்டில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று.

இங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார். 'திருப்பதிக்கு இணையான திருத்தலம் வேறொன்றும் இல்லை.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை | Tirupati Yelimalaiyan Venkatachalapathy Perumal

என்பது சொல் வழக்காக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட திருப்பதியில் அருளும் ஏழுமலையானை தரிசிக்க சில விதிமுறைகள் உள்ளன.

பொதுவாக திருமலை செல்பவர்கள், அங்கு சென்றவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் வாடிக்கையாக இருக்கிறது.

ஆனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு வரியில் பகவத் கீதை

ஒரு வரியில் பகவத் கீதை

 

 முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.

 அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து வணங்க வேண்டும்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை | Tirupati Yelimalaiyan Venkatachalapathy Perumal

பின்னர் திருமலையின் மீது ஏறியதும் 'வராக தீர்த்த கரை'யில் கோவில் கொண்டிருக்கும் 'வராக மூர்த்தியை' தரிசித்து வணங்க வேண்டும்.

அதற்கு பிறகுதான் 'மலையப்பன்' என்று சொல்லப்படும், ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை தரிசித்து வணங்க வேண்டும்.

இந்த வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சாரியர்களும் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும் .

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US