2025 கந்த சஷ்டி விரதம்: வறுமை நீங்க சொல்ல வேண்டிய திருப்புகழ்
முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் மிக முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த விரதமாக இருக்கிறது. உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய பல முருக பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை சரண் அடைந்து தங்களுடைய வேண்டுதல் வைப்பார்கள்.
மேலும், மகா கந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் 48 நாள், 21 நாள், 6 நாட்கள் என்று தங்களுக்கு ஏற்றது போல் இருந்து வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக, விரதம் இருப்பவர்கள் கட்டாயம் முருகப்பெருமானின் மந்திரங்களும் திருப்புகழ் பாராயணம் செய்து வழிபாடு செய்யவேண்டும்.
அந்த வகையில் குடும்பத்தில் கடன் சுமை, பொருளாதார சிக்கல்கள், என்று பொருளாதார ரீதியாக பிரச்சனையை சந்திப்பவர்கள் முருகப்பெருமானை நினைத்து பூஜை அறையில் இந்த திருப்புகழ் பாராயணம் செய்தால் கட்டாயம் முருகப்பெருமானின் அருளால் விரைவில் நாம் சந்திக்க பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட நல்வழி பிறக்கும்.
திருப்புகழ்:
"சிவமா துடனே அநுபோ கமதாய்,
சிவஞா னமுதே பசியாறி,
திகழ்வோ டிருவோர் ஒருரூபமதாய்,
திசைலோ கமெலாம் அநுபோகி,
இவனே யெனமா லயனோ டமரோர்,
இளையோ னெனவே மறையோத,
இறையோ னிடமாய் விளையா டுகவே,
இயல்வே லுடன்மா அருள்வாயே,
தவலோ கமெலாம் முறையோ வெனவே,
தழல்வேல் கொடுபோய் அசுராரைத்,
தலைதூள் பட ஏழ் கடல்தூள் பட,
மாதவம்வாழ் வுறவே விடுவோனே,
கவர்பூ வடிவாள் குறமா துடன் மால்,
கடனா மெனவே அணைமார்பா,
கடையேன் மிடிதூள் பட நோய் விடவே,
கனல்மால் வரைசேர் பெருமாளே."
செல்வ வளம் பெறுக படிக்க வேண்டிய கந்தர் அநுபூதி:
"வடிவும் தனமும் மனமும் குணமும்,
குடியும் குலமும் குடிபோ கியவா,
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே,
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே."
இந்த பாடல்களை நாம் சஷ்டி விரதம் இருக்கும் பொழுது அல்லாமல் தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பாராயணம் செய்து வந்தால் கட்டாயம் வாழ்வில் மிக சிறந்த மாற்றங்கள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







