3 அமாவாசை தொடர்ந்து இந்த ஆலயம் சென்றால் முன் வினை பாவங்கள் தீருமாம்

By Sakthi Raj Jun 17, 2026 04:20 AM GMT
Report

மனிதர்களுடைய வாழ்க்கை என்பது முற்பிறவியின் தொடர்ச்சி என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் நாம் முற்பிறவியில் எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம் என்பது அறியாத ஒன்றாக உள்ளது. அந்த காலகட்டங்களில் நம்மை அறியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம், நன்மையும் செய்திருக்கலாம்.

ஆகையால் தவறு செய்திருந்தால் அதனுடைய தொடர்ச்சி இப்பிறவியிலும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் துன்பங்கள், குடும்பத்தில் வறுமை, மன அமைதி இல்லாமை போன்றவை நம்மை தாக்கக்கூடும். அவ்வாறு எந்த பிறவியில் செய்த தவறினால் இந்த பிறவியில் நான் துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள்.

3 அமாவாசை தொடர்ந்து இந்த ஆலயம் சென்றால் முன் வினை பாவங்கள் தீருமாம் | Tiruvallur Veeraraghava Perumal Reduce Past Karma

இந்த ஆலயம் வந்து சென்றால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

ஒரு சிலர் எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்களுக்கு துன்பம் வந்து கொண்டே இருக்கும். அவர்களே முற்பிறவியில் நான் என்ன பாவம் செய்தேனோ என்று பல நேரங்களில் சொல்லிக் கொள்வது உண்டு.

அப்படிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு மூன்று அமாவாசை தொடர்ந்து திருவள்ளூர் வீரராகவ பெருமாளை தரிசித்து வந்தால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்ற துன்பங்கள் யாவும் விலகும்.

இந்த ஆலயத்தில் முனிவர் சாலிகோத்ரர் என்பவர் இருந்தார். ஒரு நாள் தை அமாவாசை அன்று அவர் பூஜை முடித்த பிறகு பெருமாளுக்கு நெய்வேத்தியம் படைத்தார்.

2026: ஆனி மாதம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள்

2026: ஆனி மாதம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள்

அப்போது முதியவர் ஒருவர் பசியால் வாடுவதை கண்ட முனிவர் சிறிது மாவை எடுத்து அவருக்கு கொடுத்தார். சாப்பிட்டதும் அந்த முதியவர் இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று கேட்க முனிவருக்காக வைத்திருந்த மாவையும் அவர் கொடுத்தார்.

மாவு வாங்கி சாப்பிட்ட அந்த முதியவர் அடுத்த அமாவாசைக்கும் வருகிறார். அதை தொடர்ந்து மூன்றாவது ஆண்டு தை அமாவாசையும் அன்று மாவு வாங்கி சாப்பிட முதியவர் வருகிறார். அன்றைய தினம் மாவு வாங்கி சாப்பிட்ட முதியவர் முனிவரை நான் இங்கேயே படுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார்.

3 அமாவாசை தொடர்ந்து இந்த ஆலயம் சென்றால் முன் வினை பாவங்கள் தீருமாம் | Tiruvallur Veeraraghava Perumal Reduce Past Karma

முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க குறிப்பிட்ட இடத்தை முனிவர் காட்ட அங்கேயே படுத்து பெருமாள் காட்சியளித்தார். இவர்தான் வீரராகவ பெருமாள். கர்ம வினைகளை தீர்க்கக் கூடியவராக இருக்கிறார். பெருமாளை இந்த தலத்தில் மூன்று அமாவாசைக்கு தொடர்ந்து உம்மை தரிசனம் செய்வதற்கு நோயில்லா வாழ்வும் செல்வ வளமும் வேண்டும் என வரம் பெற்றார் முனிவர்.

ஆதலால் கர்மவினையால் திருமண, தடை குழந்தையின்மை, உடல்நல குறைவு நீங்க பக்தர்கள் இங்கு தொடர்ந்து மூன்று அமாவாசை வந்து வழிபாடு செய்கிறார்கள். இங்குள்ள 'ஹிருதாபதணி' தீர்த்தத்தில் நீராடும் பொழுது நோய் விலகுகிறது மனதால் செய்த பாவமும் நீங்குகிறது.

மேலும், இவர் ஆரோக்கிய குறைபாடு நோய் தீர்ப்பவராக இருப்பதால் வைத்திய வீரராகவப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் மூலவர் பள்ளி கொண்ட நிலையில் இருப்பதால் இவரது சிலை 15 அடி நீளமும் 5 அடி உயரமும் கொண்டது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US