தன்னந்தனியாக திருவண்ணாமலை வடக்குக் கோபுரத்தை கட்டிய பெண் சித்தர்
சிவபெருமான் தன் பக்தர்களுக்கு நிகழ்த்தும் அதிசயங்கள் பல.அப்படியாக சிவபக்தர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான இடமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளது.அந்த கோயிலை சுற்றி பல சித்தர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
அந்த வகையில் திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரம் எழுந்த கதை மிகவும் சுவாரசியம் நிறைந்ததாகவும் ஆச்சிரியம் நிறைந்ததாகவும் விளங்குகிறது.அதை பற்றி பார்ப்போம்.
அதாவது 18 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தை பல செல்வந்தர்கள்,மன்னர்கள் கட்ட முயற்சித்தும் அவர்களால் கட்டிமுடிக்க முடியவில்லை.ஆனால் அதை ஒற்றை பெண்ணாக 171 அடி உயமுள்ள கோபுரத்தை கட்டி முடித்திருக்கிறார்.
இதற்கு கட்டாயம் அந்த எம்பெருமான் அருள் இல்லாமல் சாத்தியமே இல்லை. அவன் அனுமதித்தால் மட்டுமே அவன் நாமம் உச்சரிக்க முடியும்.அப்படி இருக்க அவன் பரிபூர்ண அருளை கொண்டு கட்டி முடித்திருக்கிறார் அம்மணியம்மாள்.
இந்த வடக்கு கோபுரம் கட்ட அம்மணியம்மாள் பொதுமக்கள், செல்வந்தர்கள், மைசூர் மன்னன் என்று எல்லோரிடமும் நிதி திரட்டி கோபுரத்தின் ஏழாவது நிலை வரை கட்டி முடித்து விடுகின்றார்.மீதமுள்ள நாலு நிலைகளை கட்ட கையில் பணமில்லை.
மிகவும் மனம் வருந்தி அண்ணாமலையனை நினைத்து ஐயனே எப்படியாவது இந்த கோபுரம் கட்டி முடிக்க அருள் புரிவாயாக என்று வேண்டுதல் வைக்கிறார் அம்மணியம்மாள். அவரின் வேண்டுதல் இணங்க எம்பெருமான் அவரின் கனவில் தோன்றி நீ வேலையை தொடங்கு.
வேலை முடிந்ததும் வேலையாட்களுக்கு விபூதியை அள்ளிக்கொடு மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.அதே போல் மறுநாள் வேலை முடிந்ததும் எம்பெருமான் சொன்னது போல் அம்மணியம்மாள் விபூதியை அள்ளிக் கொடுக்கிறார்.
அதை வாங்கி சென்ற வேலை ஆட்கள் வீடு திரும்பி பார்த்த பொழுது விபூதியை எல்லாம் கூலித்தொகையாக மாறியிருக்கிறது. இப்படியே சிவபெருமானின் அருளால் திருவண்ணாமலையில் வடக்குக் கோபுரத்தை கட்டி முடிக்கிறார் அம்மணியம்மாள்.
அப்படியாக திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தரான அம்மணி அம்மாளின் ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோவிலின் எதிரே அமைந்துள்ளது. இவர் கட்டிய வடக்குக் கோபுரம் ‘அம்மணியம்மாள் கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |