தினம் ஒரு திருவாசகம்
By Sakthi Raj
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே,
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே,
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே

விளக்கம்
முடிவில்லாத செழிப்பான ஒளி மலையே! வேதமாகிய மறையின் பொருளாகி என்னுடைய மனத்தின்கண் வந்து, நிலை பெற்ற தலைவனே!
கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல என் சித்தத்தின் கண் பாய்கின்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே!
ஆன்ம நாதனே! நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய். இனிமேல் உன்னை யான் வேண்டிக் கொள்வது என்ன இருக்கிறது?
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US