இலவசமாக காசி ராமேஸ்வரம் ஆன்மீக பயணம் செல்ல அற்புத வாய்ப்பு
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு வருடமும் பக்தர்களுக்காக கட்டணம் இல்லாத ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான காசி ராமேஸ்வரம் ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணமானது இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு 20 மண்டலங்களில் இருந்து ஒவ்வொரு மண்டலத்திற்கு 30 பக்தர்கள் என மொத்தம் 600 பக்தர்களை அழைத்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணமானது மூத்த குடிமக்களான வயது 60 லிருந்து 70 வயதான பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பமுடையவர்களின் வருட வருமானம் 2 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும், அதோடு அவர்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்யக்கூடிய நல சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பட்டணமில்லாத ஆன்மீக பயணத்தில் கலந்து கொள்ள ஆசை கொள்பவர்கள் அந்தந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை நேரில் பெற்றோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் விண்ணப்பங்களை www.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கலந்து கொள்ளலாம்.
அதோடு இந்த கட்டணமில்லாத ஆன்மீகப் பயணத்தை கலந்து கொள்வதற்காக உங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22-10-2025. அதனால் இந்த அற்புதமான வாய்ப்பை வாய்ப்புள்ளவர்கள் பயன் படுத்திகொண்டு பயன் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







