சித்தர்கள் வாழும் அத்திரி மலை கோயில் ரகசியங்களும் அதிசயங்களும்
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்துள்ளது அத்திரி மலை கோயில். இது மிகவும் பழமையான திருத்தலமாக விளங்குகிறது.
இந்த கோயில் சதுரகிரி மலைக்கு இணையாக கூறப்படுகிறது. இந்த தலமானது தவத்தின் சிறப்பை காட்டும் அத்திரி முனிவரின் இருப்பிடமாகும். இப்போது இந்த கோயிலின் வரலாறு என்ன, இதுக்கு பின்னாடி இருக்கிற கதை என்ன முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.
தல வரலாறு:
சப்தரிஷி முனிவர்கள் அதாவது ஏழு முனிவர்களுள் ஒருவரான அத்திரி முனிவர் இந்த புனிதமான மலையில் ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் புரிந்ததா புராணங்கள் கூறுகிறது. இந்த ஆயிரம் ஆண்டுகள் தவம், கோயிலுக்கு ஒரு தெய்வீக ஆற்றலை வழங்கியுள்ளது. அவருடைய மனைவியான அனுசியா தேவியும் அவருக்கு இணையாக பக்திக்கு இலக்கணமா திகழ்கிறார்கள்.
அதோடு கற்பு நெறியும் ஒழுக்க நெறிலும் சிறந்தவர்களாக அனுசியா தேவி விளங்குகிறார். அத்திரி முனிவரோட தவ வலிமையை சோதிக்க விரும்பிய மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் மூன்று பேரும் துறவி வேடத்தில் வந்து அவரிடம் உணவு கேட்டனர். அப்போது அனுசியா தேவியின் மகிமையினால மும்மூர்த்திகளும் குழந்தைகளாக மாறி தேவியோட மடியில தவழ்ந்து விளையாடியதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த அபூர்வ நிகழ்வு இந்த தலத்தோட புனித தன்மையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. முருகப்பெருமான் பாலசுப்பிரமணியர் வடிவத்தில் பக்தர்களுக்கு இந்த மலையில் இருந்து அருள்பாலித்து வருகிறார். அத்திரி முனியோட தவத்தை மெச்சிய முருகப்பெருமான் அவருக்கு இங்கு காட்சி கொடுத்ததாகும், அதன் பிறகு அவர் இங்கே குடி கொண்டதாகவும் புராணங்கள் கூறுகிறது.
இங்குள்ள முருகன் சன்னதி ஞானம் வெற்றி மற்றும் தைரியத்தை வழங்கி வருவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. மலையின் அடர்ந்த வனப்பகுதியில் இக்கோயில் பல நூற்றாண்டுகளாக மக்களின் பார்வையில் படாமல் இருந்துள்ளது. பின்னர் பழங்குடி மக்கள், சித்தர்கள் மூலமா இந்த தலத்தோட மகிமை வெளிப்பட்டுள்ளது. தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
தல அமைப்பு:
அத்திரி மலை கோயில் ஒரு பெரிய கட்டிடமா இல்லாமல் இயற்கை அழகுடன் சேர்ந்து எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மலை சரிவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்வது ஒரு அற்புதமான ஒரு சுவாரஸ்யமான பயணமாக இருக்கும். இந்த கோயிலோட முக்கிய சன்னதிகளாக ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதி, முருகப்பெருமானுக்கு பக்கத்தில் அத்திரி முனிவர் வழிபட்ட அத்திரி லிங்கம் மற்றும் அனுசியா தேவியின் சன்னதிகள் அமைந்துள்ளன.
இவற்றுடன் விநாயகர், சிவன், ஐயப்பன் சன்னதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. சன்னதிகள் அனைத்துமே எளிமையாகவும் பக்தர்களுக்கு அமைதி தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலை பயணத்தினால் களைத்து வரும் பக்தர்களுக்கு ஓய்வெடுக்கும் வகையில் கோயில் வளாகத்தில் சிறிய மண்டபங்களும் நீர்நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு கோயிலுக்கு அருகிலேயே அகத்தியர் குகை அமைந்துள்ளது. இந்த குகையில் அகத்திய முனிவர் தவம் புரிந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இந்த தலம் அரிய மூலிகைகளாலும் இயற்கையின் அதிசயங்களையும் தன்னகத்தை கொண்டு திகழ்கிறது.
தல சிறப்புகள்:
அரிய மூலிகைகள்:
அத்திரி மலை பல வகையான அரிய ஆயுர்வேத மூலிகைகளின் இருப்பிடமாக உள்ளது. இந்த மூலிகைகள் பல வகையான நோய்களை குணப்படுத்துவதாக இங்கு வருகைப்புரியும் பக்தர்கள் கூறுகின்றனர்.
புனிதமான ஊற்றுகள்:
கோயிலுக்கு அருகில் நிறைய சுனைகள் அதாவது ஊற்றுகள் உள்ளன. இந்த ஊற்றுகள் அனைத்துமே மிகவும் புனிதமானவை. முருகப்பெருமானுடைய சக்தி இந்த ஊற்றுகளில் இருக்கும் தண்ணீரில் கலந்து இருக்கிறது. இந்த நீரினை அருந்துவதனாலும் இந்த நீரில் நீராடுவதாலும் உடல் மனம் சார்ந்த அனைத்து நோய்களும் குணமடையும் என்பது பக்தர்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது. இரைச்சல்களில் இருந்து விடுபட்டு அமைதியான மனநிலை வேண்டும் என நினைக்கிறவர்களுக்கு அத்திரி மலை அமைதியான ஒரு சூழலை வழங்குகிறது.
திருவிழாக்கள்:
அத்திரிமலை கோயிலில் பல முக்கியமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கு. சில முக்கியமான விழாக்கள பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
பங்குனி உத்திரம்:
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரம் ரொம்ப சிறப்பாக கொண்டாடப்படுது. இந்த நாளில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் இந்த நாளில் அவர்களுடைய நேர்த்திக்கடன செலுத்துகின்றனர்.
கார்த்திகை தீபம்:
கார்த்திகை மாதத்தில், கார்த்திகை தீப திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது இந்த நாளில் அத்திரி மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களால் வழிபடப்படுது.
மகா சிவராத்திரி:
அத்திரி லிங்கத்திற்கு மகாசிவராத்திரி நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. பௌர்ணமி மற்றும் அமாவாசை: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அத்திரி மலை கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
வழிபாட்டு நேரம்:
இந்த தலம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு செல்வதற்கு வனத்துறை அனுமதித்த நாட்களில் மட்டுமே செல்ல முடியும். அந்த குறிப்பிட்ட நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
அத்திரி மலை கோயில் பயணம் ஒரு சாதாரண வழிபாட்டு அனுபவம் மட்டும் இல்லாமல், மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தும் ஒரு ஆன்மீம் பயணமாகவும் அமைகிறது. இயற்கையையும் அமைதியையும் ஆன்மீகத்தையும் ஒருங்கே விரும்பும் யார் வேண்டுமானாலும் இந்த திருத்தலத்துக்கு சென்று வரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







