நாளைய ராசி பலன் (23-04-2026)

Report

 மேஷம்:

காலை முதல் மனம் பதட்டமாகவே காணப்படும். ஒரு சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். திடீரென்று எதிர்பாராத நபரை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் உடல்நிலை கவனம் வேண்டும்.

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் மற்றும் அமைதியின்மை வரலாம். அத்தை உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

மிதுனம்:

 எதிர்காலத்தைப் பற்றிய பயமும் பதட்டமும் வரலாம். நண்பர்களை பற்றி நன்கு புரிந்து கொள்வீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற திட்டமிட்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்:

இன்று வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது அவசியம். ஒரு சிலருக்கு எதிரிகளால் சில பிரச்சனைகள் வரலாம். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

சிம்மம்:

அரசியலில் இருப்பவர்களுக்கு இன்று முக்கியமான நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது.

கன்னி:

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு புத்தக வாசிப்பில் அதிக ஈடுபாடு வரலாம். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.

துலாம்:

இன்று முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். ஓய்வு இல்லாமல் நிறைய வேலைகள் பார்க்கக்கூடிய நிலைமை வரலாம். எதிர்பாராத நபரிடமிருந்து அழைப்புகளை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

கணவன் வழி சொந்தங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். ஒரு சிலருக்கு காதல் வாழ்க்கை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள்.

ஜோதிடம்: 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் இவை எல்லாம் நடக்குமாம்

ஜோதிடம்: 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் இவை எல்லாம் நடக்குமாம்

தனுசு:

வியாபாரம் தொடர்பாக புதிய முயற்சிகள் செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். புதிய பொருள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கணவன் உங்களை புரிந்து நடந்து கொள்வார்.

மகரம்:

ஒரு சிலருக்கு மனச்சோர்வு வரலாம். தேவையில்லாத குழப்பங்கள் வரலாம். உணவு விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். லட்சியத்திற்காக சில முயற்சிகளை எடுப்பீர்கள்.

மீனம்:

இன்று ஒரு சிலருக்கு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய குழப்பம் வரும். தேவை இல்லாமல் யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சொந்தங்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US