நாளைய ராசிபலன் (27-08-2026)
மேஷம்:
இன்று உங்களுடைய பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சேமிப்பு அவசியம்.
ரிஷபம்:
இன்று நீங்கள் பொருளாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நெருங்கியவர்கள் உங்களுடைய மனம் புண்படும்படி பேசலாம். கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
காலை முதல் மனதில் குழப்பங்களும் கவலைகளும் வந்து செல்லும். தந்தை உடனான கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். உங்கள் திறமை வெளிப்படும்.
கடகம்:
மனதில் உள்ள குழப்பங்களும் கவலைகளும் விலகும். தொலைத்தூர பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் வீட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
சிம்மம்:
வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த சிக்கல் விலகும். காதல் வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும். வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
கன்னி:
படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை ரீதியாக சில குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு வந்து சேரும்.
துலாம்:
உங்கள் வேலைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். உறவினர்கள் வழியே இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரம்.
தனுசு:
பிள்ளைகள் வழியே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். வீண் விவாதங்கள் தவிர்க்க வேண்டும்.
மகரம்:
வழக்கு தொடர்பாக நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
கும்பம்:
தொலைந்து போன பொருட்களை மீட்டெடுப்பீர்கள். கடன் வாங்கும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கனவு நிறைவேறும்.
மீனம்:
இன்று எதிர்பாராத முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுக்கும். முன்னேற்றமான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |