இன்றைய ராசி பலன் (22-02-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நெருங்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். மதியம் மேல் மனதில் உள்ள கவலைகள் விலகும்.
ரிஷபம்:
உங்களுக்கு இன்று வேலை பளு அதிகரிக்கும். சிலரின் உண்மை முகம் புரிய வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து செய்தால் நன்மை அளிக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும்.
மிதுனம்:
மனதில் ஆயிரம் குழப்பம் உண்டாகும். வேலையிலும் குடும்பத்திலும் உங்களுக்கு சில சங்கடமான நிலை உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
மனதில் ஆயிரம் குழப்பங்களும் சிந்தனையும் ஓடும். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
உங்களுக்கு நெருங்கிய சொந்தகளிடம் நீங்கள் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
கன்னி:
உடல் ஆரோக்கியத்தில் சந்தித்த சங்கடம் விலகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். உங்கள் சொந்த விஷயங்கள் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
துலாம்:
இன்று மனதில் நம்பிக்கை பிறக்கும் நாள். மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப பிரச்சனை விலகும்.
விருச்சிகம்:
எதிர்காலம் பற்றிய பயமும் குழப்பமும் விலகும். குடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாகி இருப்பார்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். சுற்றுலா பயணம் திட்டமிட்டுவீர்கள்.
தனுசு:
கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். மனசோர்வு விலகும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உயரும். வழக்கு தொடர்பான மன அழுத்தம் விலகும். சிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.
மகரம்:
உங்களுக்கு நீண்ட நாட்கள் தொந்தரவு செய்தவர்கள் விலகி செல்வார்கள். குலதெய்வ அசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனை நல்ல முடிவை பெரும். வேலை மாற்றம் செய்வதை பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம்:
வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நீங்கள் நினைத்தது போல் நடக்கும். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த மன குழப்பங்கள் விலகும். உங்களை பற்றி சிலர் தேவை இல்லாத தவறான விஷயங்கள் பரப்புவார்கள்.
மீனம்:
பிள்ளைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சை புரிந்து நடந்து கொள்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் தேவைக்கு சில விஷயங்கள் செய்து கொடுப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |