நாளைய ராசி பலன்(03-01-2026)
மேஷம்:
மனதில் புதிய நம்பிக்கை மலரும். உறவினர்கள் பற்றிய தேவையில்லாத சிந்தனையை விட்டு விடுங்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.
ரிஷபம்:
குடும்பத்துடன் இன்று நீங்கள் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். ஒரு சிலர் சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் வருகிறது. வீடுகளில் இருந்த எதிர்ப்புகள் மறையும்.
மிதுனம்:
வாழ்க்கை ரீதியாக இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான புரிதல் ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக நீங்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது அவசியம். சிந்தித்து செயல்படுங்கள்.
கடகம்:
ஒரு சிலருக்கு ஆன்மீக பணிகளில் அதிக ஆர்வம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் சற்று நிதானமாக செல்லுங்கள். வேலையில் இன்று நீங்கள் முழு கவனமும் செலுத்த வேண்டிய நாள்.
சிம்மம்:
இன்று எதிலும் நீங்கள் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். வாழ்க்கை துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது அவசரம் வேண்டாம்.
கன்னி:
குடும்பத்தினரை நீங்கள் அனுசரித்து செல்வது மிகவும் அவசியம். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
துலாம்:
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் இன்று அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் தேவை இல்லாத வாக்குவாதங்களை இன்று நீங்கள் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதகமாக கிடைக்கலாம். கவனம் வேண்டும்.
தனுசு:
இன்று குடும்பத்தில் உங்களுடைய பக்குவமான பேச்சு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். உடன் வேலை செய்பவர்கள் வழியாக நன்மை பெற போகிறீர்கள். ஒரு சிலருக்கு உடல் சோர்வு உண்டாகும்.
மகரம்:
வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு புதிய பொறுப்பு வரலாம். உங்களுடைய வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அக்கறையோடு படிக்க வேண்டும்.
கும்பம்:
மனதளவில் இன்று புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகள் செய்வீர்கள். பழைய கடன் பாகிகளை அடைக்க கூடிய பொன்னான நாள். வேலையில் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்:
அரசு வழியே உங்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ப ஆதாயப்பலன் நிச்சயம் உண்டு. எதிரிகளிடையே சில மனக்கசப்புகள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |