இன்றைய ராசி பலன் (22-01-2026)
மேஷம்:
ஒரு சிலருக்கு மனம் பதட்டமான நிலையில் இருக்கும். உடல் சோர்வு அதிகம் காணப்படும். ஆக முடிந்த வரை இன்று நீங்கள் எதையும் நிதானமாக கையாளுங்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
திருமண வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய குழப்பங்களும் மன வருத்தங்களும் சந்திக்க நேரலாம். வேலை பளு அதிகரிக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்:
நண்பர்களை சந்தித்து பேசி மகிழக்கூடிய நாள். ஒரு சில முக்கிய பெரியவர்களின் ஆலோசனை பெறுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத மிக பெரிய பிரச்சனை வரலாம். மதியம் மேல் வேலையில் கவனம் வேண்டும்.
கடகம்:
இன்று தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு இன்று அமைதியான சூழலால் உண்டாக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு தொந்தரவு செய்த நபர் விலகி செல்வார்.
சிம்மம்:
செய்யும் வேலையில் சில தடைகளை சந்திப்பீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். புதிய அரசியல் நபரின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். நன்மையான நாள்.
கன்னி:
இன்று நீங்கள் வேலையில் பெயரும் புகழும் பெறுவீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனை வந்து செல்லும்.
துலாம்:
இன்று முடிந்த வரை நீங்கள் தேவை இல்லாமல் யாரிடமும் பேசுவதை தவிர்த்து விடுங்கள். வேலை பளு அதிகரிக்கும். மனதில் தெளிவும் தைரியமாக முடிவு எடுக்கும் நிலையம் உருவாகும் நாள்.
விருச்சிகம்:
உங்களுடைய விருப்பம் நிறைவேறும். உங்கள் தாய் வழி உறவுகளால் இன்று மனதில் நிம்மதி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு:
மன அழுத்தம் குறையும் நாள். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் உங்களுக்கு நல்ல பாராட்டுகளும் நற்பெயரும் கிடைக்கும்.
மகரம்:
வேலைக்காக வெளியூர் செல்வீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைகளுக்கு வந்து சேரும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நன்மையான நாள்.
கும்பம்:
இன்று திடீர் எதிர்பாராத மன வருத்தம் வரலாம். புதிய முயற்சிகளை எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். நன்மையான நாள்.
மீனம்:
இன்று வீண் அலைச்சல் உண்டாகும், எதையும் செய்யும் முன் பலமுறை யோசித்து செய்யுங்கள். தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. உழைப்பு அதிகரிக்கும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |