நாளைய ராசி பலன் (18-03-2026)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் சில முக்கியமான நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் விஷயங்களில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனை சரி ஆகும்.
ரிஷபம்:
அத்தை வழி உறவுகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து இருக்க கூடிய நாள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்:
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். தாய் வழி உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் வழியே உங்களுக்கு பெருமைகள் வந்து சேரும்.
கடகம்:
உறவுகள் இடையே ஏற்பட்ட விரிசல் சரி ஆகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகி செல்வார்கள். பிடித்த செயல்கள் செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்:
வருமானம் உயர்த்துவதை பற்றி யோசிப்பீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலமாக இருக்க போகிறது.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். மனதில் ஆயிரம் சிந்தனைகள் தோன்றி மறையும். வேலையில் உங்களைப் பற்றி தவறாக புரிந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உயர் அதிகாரிகளிடம் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
விருச்சிகம்:
தொழில் ரீதியாக இன்று நீங்கள் கடுமையான போராட்டத்தை சந்திக்கலாம். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். வேலையில் இடமாற்றம் வரலாம்.
தனுசு:
பிள்ளைகள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுவீர்கள். பற்றிய பயம் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் கவனமாக செயல்படுவது அவசியம். சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள்.
மகரம்:
இன்று வாழ்க்கையின் உண்மை நிலையை புரிந்து கொள்வீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். தொழில் ரீதியாக நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரலாம்.
கும்பம்:
வாழ்க்கை துணையுடன் வருமானம் உயர்த்துவதை பற்றி நீங்கள் ஆலோசனை செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். புதிய ஆடைகள் வாங்கி மகிழ்விர்கள்.
மீனம்:
இன்று பிள்ளைகள் வாழ்க்கையை பற்றிய கவலை உண்டாகும். திடீர் வெளியூர் பயணம் சில நேரலாம். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |