இன்றைய ராசி பலன் (03-05-2026)
மேஷம்:
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
நண்பர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் சந்தித்த தடைகள் யாவும் விலகும்.
மிதுனம்:
குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரி வாழ்வில் இருந்த சிக்கல்கள் யாவும் விலகும். தொலை தூர பயணம் மன அமைதியை கொடுக்கும்.
கடகம்:
உங்கள் வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். முகம் தெரியாத நபர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். கடன் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
அரசியல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை வரலாம்.
கன்னி:
பணம் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை உண்மை பேசி பழகுங்கள். குடும்பத்தில் பெரியவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
துலாம்:
சுற்றியுள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். உங்களிடம் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்தவர்கள் விலகி செல்வார்கள். வீண் கோபம் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழ்வீர்கள். கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள்.
தனுசு:
இன்று பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை கிடைக்கும் நாள். உங்களின் திறமை வெளிப்படும். உறவினர்கள் இடையே எற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். வருமானத்தில் சந்தித்த தடை நீங்கும்.
மகரம்:
மனதில் உள்ள குழப்பங்கள் மறையும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.
கும்பம்:
மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள். எதையும் சுயமாக சிந்தித்து முடிவு எடுங்கள். சமுதாயத்தில் உங்களுக்கு நினைத்த பெயரும் மரியாதையும் கிடைக்கும் நாள்.
மீனம்:
மனதில் பல குழப்பங்களும் சிந்தனைகளும் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சகோதரி உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |