நாளைய ராசி பலன் (18-10-2026)

Report

மேஷம்:

வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு இவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் ரீதியாக இவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். கல்வியில் உள்ள தடை விலகும்.

ரிஷபம்:

உங்கள் மனதில் உள்ள குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். ஆலய திருப்பணிகளில் கலந்துக் கொள்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு மனநிறைவை கொடுக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

மிதுனம்:

எதையும் ஒரு முறைக்கு இருமுறைக்கு தீர ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் ஆலயம் சென்று வழிபாடு செய்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

2026 நவம்பர் மாதம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இவ்வளவு நன்மைகள் நடக்க போகிறதா?

2026 நவம்பர் மாதம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இவ்வளவு நன்மைகள் நடக்க போகிறதா?

கடகம்:

உணர்வு ரீதியாக சில ஏற்ற இறக்கம் இருக்கும்.கணவன் வழி சொந்தங்களால் நன்மை உண்டாகும். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும். சுயதொழில் செய்பவருக்கு நல்ல லாபம் உண்டாகும்.

சிம்மம்:

தேவை இல்லாத கடன் வாங்குவதற்கு தவிர்க்க வேண்டும். வழக்கு விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்காதீர்கள்.

கன்னி;

குடும்பத்தில் முக்கியமான நபர் வருகையால் மகிழ்ச்சியான நிலை காணப்படும். வேலை ரீதியாக உயர் அதிகாரிகளிடம் இருந்த தொல்லை விலகும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் வேண்டும்.

துலாம்:

இன்று மனதில் இறைசிந்தனை அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். வெளிநாடு விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும். மனதில் இருந்த குழப்பமும் கவலையும் விலகும்.

விருச்சிகம்:

இன்று குடும்பத்தில் சிறு சிறு சண்டை வந்து சேரும். சகோதர வழி உறவால் சந்தித்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ வழிபாடு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

தனுசு:

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் நிலையில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டுவருக்கு நல்ல பதில் கொடுக்கும் வகையில் உங்கள் செயல் இருக்கும்.

2026: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார் ?

2026: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார் ?

மகரம்:

இன்று கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். முக்கியமான நபரை சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் விலகும்.

கும்பம்:

எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டு சாதிப்பீர்கள். வழக்கு விஷயத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். தாய் வழி உறவால் இருந்தால் சிக்கல் விலகும்.

மீனம்:

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சி நல்ல முறையில் முடியும். திருமணம் தொடர்பான விஷயத்தில் இருந்தால் குழப்பங்கள் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US