நாளைய ராசிபலன் (28-10-2026)
மேஷம்:
வியாபாரத்தில் புதிய பாதைகளை கண்டுபிடிப்பீர்கள். எதிர்ப்புகளை மீறி வெற்றி அடைவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்:
மனதில் குழப்பம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். பிறருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
மிதுனம்:
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான நிலை காணப்படும். திடீர் செலவுகள் வரலாம்.
கடகம்:
உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ ஆசைப்படுவீர்கள்.
சிம்மம்:
பெரியவர்களுடைய ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள். உறவினர்கள் வழியாக சுப செய்தி வந்து சேரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கன்னி:
வாழ்க்கை துணை குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். தாய்மாமின் வழியே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
துலாம்:
மனதில் இருந்த குழப்பம் விலகும். புதிய முயற்சிகள் கைக்கூடி வரும். தேவை இல்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
விருச்சிகம்:
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிரபலமானவர்களுடைய அறிமுகமும் ஆறுதலும் கிடைக்கும். தவறிய வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள்.
தனுசு:
வியாபார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும்.
மகரம்:
வேலையில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். கற்பனை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அனுபவம் மேம்படும்.
கும்பம்:
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். உறவுகளிடம் பொறுமையாக இருப்பது அவசியம். வேலையில் தவறவிட்ட பொறுப்புகள் மீண்டும் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
மீனம்:
மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். சுப முயற்சிகளில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திடீர் வரவுகளால் நெருக்கடிகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |