நாளைய ராசி பலன்(28-12-2025)

Report

 மேஷம்:

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் தொடர்பாக நிறைய குழப்பங்களை சந்திக்க கூடிய நாள். கவனம் தேவை.

ரிஷபம்:

இன்று கடன் கொடுக்கல் வாங்கலில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளால் வரைக்கும் செல்ல நேரலாம். இறை வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.

மிதுனம்:

நண்பர்கள் உங்களுக்கு ஒரு சில முக்கியமான அறிவுரைகள் சொல்லலாம். ஒரு சிலர் சொந்த ஊருக்கு சென்ற சொந்தங்களை சந்திக்கக்கூடிய மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்.

துணை மீது எப்பொழுதும் தேவை இல்லாத சந்தேகம்... உறவில் விரிசலை சந்திக்கும் ராசிகள்

துணை மீது எப்பொழுதும் தேவை இல்லாத சந்தேகம்... உறவில் விரிசலை சந்திக்கும் ராசிகள்

கடகம்:

இன்று நீங்கள் எதிர்பாராத விதமாக புதிய நட்புகளை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய ஒரு அற்புதமான யோகம் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் நிகழும்.

சிம்மம்:

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவை இல்லாத வார்த்தைகளை விடாதீர்கள். முடிந்தவரை வியாபாரத்தில் பொய் சொல்லி எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். கவனம் தேவை.

கன்னி:

இன்று உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய அற்புதமான செய்தியை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக புதிய மாற்றங்கள் உருவாகலாம். சுப காரிய நிகழ்ச்சிகள் வெற்றி அடையும்.

துலாம்:

ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகள் சந்திக்க நேரும். தொழில் தொடர்பாக ஒரு சில புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். மனதில் உள்ள கவலையும் பயமும் விலகும். ஒரு சிலருக்கு மறதி உண்டாகலாம்.

விருச்சிகம்:

எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளலாம். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.

திருப்பதி பெருமாளின் அருளால் உங்கள் திருமணம் நடக்க.. இதோ ஒரு அற்புத வாய்ப்பு

திருப்பதி பெருமாளின் அருளால் உங்கள் திருமணம் நடக்க.. இதோ ஒரு அற்புத வாய்ப்பு

தனுசு:

நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழக் கூடிய அற்புதமான நாள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும். மறைமுகமாக உங்களுக்கு சங்கடம் கொடுத்தவர் விலகிச் செல்வார்.

மகரம்:

வாழ்க்கையில் இன்று மிகவும் தைரியமான ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு குடும்பங்களுடன் வெளியூர் பயணம் செல்லும் நேரலாம். மாலை மேல் மகிழ்ச்சியான செய்து வந்து சேரும்.

கும்பம்:

நீண்ட நாளாக உங்களிடம் கடன் வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காத நபரிடம் பணம் கிடைக்கும். பெற்றோர்களிடம் அன்பான பரிசை பெறுவீர்கள். வழக்கு விஷயம் சாதகமாக அமையும்.

மீனம்:

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளிடமிருந்து சில பரிசுகளை பெறுவீர்கள். சொத்து விவகாரத்தில் உள்ள சிக்கல் விலகும் நாள்.      

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US