இன்றைய குரு பெயர்ச்சி சிறப்பு ராசி பலன்கள் (26-05-2026)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். இருப்பினும் மதியம் மேல் தேவை இல்லாத குழப்பமும் சோர்வும் உண்டாகலாம். வேலையில் முழு கவனம் செலுத்தி முன்னேறுவீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டாகும்.

ரிஷபம்:

வாழ்க்கை துணையிடம் ஏற்பட்ட கருத்து மோதல்களை சரி செய்வீர்கள். ஒரு சிலருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாய் வழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நினைத்த வேலை நடக்கும்.

மிதுனம்:

இன்று வேலை ரீதியாக தொந்தரவு செய்த உயர் அதிகாரிகள் விலகி செல்வார்கள். தாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடையின்றி நடக்கும்.

சிம்மம்:

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட சில முக்கிய வழிகள் பிறக்கும். தொழில் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

2026 குரு பெயர்ச்சி 12 ராசிகள் செல்ல வேண்டிய குரு பரிகார ஆலயங்கள்

2026 குரு பெயர்ச்சி 12 ராசிகள் செல்ல வேண்டிய குரு பரிகார ஆலயங்கள்

கடகம்:

மன ரீதியாக சந்தித்த அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். பொருளாதாரம் உயர்த்துவதை பற்றிய ஆலோசனை நல்ல முடிவைப்பெறும். நற்செய்தி வந்து சேரும்.

கன்னி:

எதிர்காலம் பற்றிய பயம் விலகும். உடன் பிறந்தவர்களால் சந்தித்த குழப்பங்கள் மற்றும் சண்டை விலகும். தாய் மாமன் வழியே சில கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் கவனமாக பேசுவது அவசியம்.

துலாம்:

இந்த காலகட்டங்களில் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்வது அவசியம். சிலருக்கு எதிர்பாராத விதமாக திடீர் வேலை உயர்வு கிடைக்கும். எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை செய்ய திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்:

இன்று வீண் கோபம் தவிர்ப்பது நல்லது. தேவை இல்லாத பெருமைகள் பேசுவதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு திடீர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது மட்டுமே நன்மைகளை தரும்.

தனுசு:

உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் பண வரவு வரும். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத கருத்துமோதல்கள் வரலாம்.

மகரம்:

வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்து சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பொற்காலம்.

எப்பொழுதும் இல்லாததை யோசித்து குழப்பத்திலே இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

எப்பொழுதும் இல்லாததை யோசித்து குழப்பத்திலே இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

கும்பம்:

கலை துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம் ஆரம்பம். நினைத்த உயரத்தை அடைய எதிர்பார்த்த வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். விலகி சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள்.

மீனம்:

நீண்ட நாட்களாக கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். தொலை தூர கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US