இன்றைய ராசி பலன்(10.08.2024)

Report

 மேஷம்

வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகம் ஆகலாம். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சாதகமாக அமையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் பார்க்கும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும்.பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத பிரச்னை ஏற்படலாம்.அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

மிதுனம்

உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும்.இருந்தாலும் செய்யும் வேலைகளில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.வியாபாரத்தில் சில பிரச்னை உண்டாகுவதால் எதிர்பார்த்த வருமானம் தள்ளி போகலாம்.

கடகம்

நீண்ட நாள் முடிவிற்கு வராமல் இருந்த வேலை முடிவிற்கு வரும்.எதையும் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை எட்ட முடியாமல் போகும்.

சிம்மம்

மனதில் தேவை இல்லாத குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டிருந்த வேலையில் மாற்றம் உண்டாகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.உங்கள் முயற்சி லாபமாகும்.

கர்ம பலன் எப்பொழுது வேலை செய்யும்?

கர்ம பலன் எப்பொழுது வேலை செய்யும்?


கன்னி

வியாபாரத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் வரும்.எதிலும் யோசித்து விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.

துலாம்

போராடி வெற்றிக்காண வேண்டிய நாள்.பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். வார்த்தைகளில் நிதானம் தேவை.இறைவழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்

நீண்ட நாள் கைக்கு வரவேண்டிய பணம் வரும்.எதையும் போராடி வெற்றியடையும் நாள்.வியாபாரத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்.

தனுசு

பணிபுரியும் இடத்தில் ஒருசிலர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.உங்கள் செயல் இன்று லாபமாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடித்துக்காட்டுவீர்.

மகரம்

குடும்பத்தில் ஏற்பட்ட துன்பங்கள் படி படியாக குறையும்.வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

கும்பம்

தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.எதையும் பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மற்றவரிடம் வீண் விவாதம் வேண்டாம் அதனால் பிரச்னை ஏற்படும்.

மீனம்

திடீர் என்று சங்கடங்களுக்கு ஆளாகும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வர தாமதமாகும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US