இன்றைய ராசி பலன் (18.07.2024)
மேஷம்
இன்று செயலில் இருந்த நெருக்கடி விலகும்.வியாபாரத்தில் வருமானம் உயரும்.கால சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
மனதில் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சரியாகும்.பொருளாதார நிலை உயரும்.எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.பயணத்தால் நன்மை உண்டு.
மிதுனம்
உறவினர்கள் இன்று உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.உடன் இருப்பவரை அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரம் லாபமாகும். நேற்றைய பிரச்னை முடியும்.
கடகம்
உங்கள் எண்ணம் நிறைவேறும்.பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். வியாபாரத்தில் இருந்த எதிரிகள் விலகுவர். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
சிம்மம்
எதையும் பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். நினைத்ததை நினைத்தபடி சாதித்து காட்டுவீர்கள்.வியாபாரத்தை விரிவு செய்யும் பணியில் ஈடுபடுவீர்கள்.
கன்னி
தடைகளைத்தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும். வேலைகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.தொழிலில் போட்டியாக இருந்தவர் விலகிச் செல்வவார்கள்.
துலாம்
உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகும். நண்பர்களால் உங்கள் முயற்சி நிறைவேறும். செயல்களில் கவனம் தேவை.அலுவலக பிரச்னை முடிவிற்கு வரும். உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடி ஏற்படலாம்.
தனுசு
எந்த செயலையும் இடம் பொருள் அறிந்து செயல் படுவது அவசியம். முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
மகரம்
மறைமுக எதிரிகள் உருவாகலாம்.வருமானம் அதிகரிக்கும்.நீங்கள் எடுக்கும் உங்கள் முயற்சி தள்ளிப்போகும். தக்க சமயத்தில் கிடைக்கவேண்டிய உதவி கிடைக்கும்.
கும்பம்
திட்டமிட்டபடி வேலையை செய்து முடிப்பீர்கள் . எதிர்பார்த்த வரவு வரும்.அவசர வேலைகள் உருவாகி சங்கடத்திற்கு ஆளாகலாம். காரியங்களில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். நிதிநிலை உயரும்.
மீனம்
வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |