நாளைய ராசி பலன்(26-11-2025)
மேஷம்:
இன்று உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகும். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். சிலருக்கு பல் வழி உண்டாகலாம்.
ரிஷபம்:
இன்று வழக்கு விஷயங்களில் உங்களுக்கு எல்லா சூழ்நிலையும் சாதகமாக அமையும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். தொலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.
மிதுனம்:
மனதில் எதிர்காலம் பற்றிய பல கவலைகளும் பயமும் உண்டாகும். உங்களுக்கு எதிராக சிலர் அலுவலகத்தில் திரும்ப வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல் வேண்டிய நாள்.
கடகம்:
இன்று கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகலாம். நன்மையான நாள்.
சிம்மம்:
ஆன்மீக வழிபாட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நட்பு வட்டாரம் விரிவடையும். உடன் பிறந்தவர்கள் கூட உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.
கன்னி:
நண்பர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
துலாம்:
வழக்கு விஷயங்களில் தைரியமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு நட்பு வட்டாரத்தில் மிகுந்த ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் நீண்ட நாள் நினைத்த விஷயம் ஒன்று நடக்கும்.
விருச்சிகம்:
சொந்தங்கள் மத்தியில் சந்தித்த அவப்பெயர் விலகும் நாள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு:
வீண் பிடிவாதம் கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். விட்டுக்கொடுத்து செல்வதால் நன்மை உண்டாகும். சிலருக்கு தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும் நாள்.
மகரம்:
உங்கள் குடும்பத்தினருக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். மதியம் மேல் வாங்கி தொடர்பான அலைச்சல் இருக்கலாம். பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
கும்பம்:
இன்று தேவை இல்லாமல் காலை முதல் அதிக யோசனையுடன் இருப்பீர்கள். வீண் வெறுப்புகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களிடம் தேவை இல்லாமல் கோபம் கொள்ளாதீர்கள்.
மீனம்:
எதையும் சகித்து கொண்டு செல்லும் மனப்பக்குவம் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டாகும். பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |