இன்றைய ராசி பலன் (28-04-2026)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் எதையும் நிதானமாக கையாளுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வேலை பளு அதிகரிக்கலாம். காலை முதல் சுறுசுறுப்பாக செயல்பட்டு விரைவில் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்:
சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு வாழ்க்கை பற்றிய வெறுப்பும் விரக்தியும் வரலாம். வேலையில் முழு கவனம் செலுத்திய வேண்டிய நாள்.
மிதுனம்:
குடும்பத்தில் நீங்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். பொருளாதார விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும். கடன் வாங்கியவர்கள் உங்களிடம் வந்து கொடுப்பார்கள்.
கடகம்:
வீடுகளுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி குழப்பம் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களால் சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள்.
சிம்மம்:
தேவை இல்லாமல் கோபம் கொள்வதை தவிர்த்து விடுங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் சில மன கசப்புகள் வரலாம். முடிந்த வரை பெரிய அளவில் கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். போட்டி பொறாமை தவிர்ப்பது நல்லது. உயர் படிப்பில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். தாய் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்:
இன்று உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். புதிய நட்புகளின் அறிமுகம் சில உயரத்தை கொடுக்கும்.
விருச்சிகம்:
இன்று உங்களிடம் சண்டையிட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். தொழில் வாழ்க்கையில் சந்தித்த போட்டி பொறாமையில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
தனுசு:
பிள்ளைகளிடம் கடினமாக நடந்து கொள்ளாதீர்கள். சிலர் ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள். பூர்விக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
இன்று நீண்ட நேரம் தயக்கத்திற்கு பிறகு முக்கியமான விஷயத்தை செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளின் அறிமுகத்தால் முக்கியமான வேலை ஒன்று நடக்கும். வீண் செலவு தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
மனதில் ஆயிரம் சிந்தனையும் குழப்பமும் உண்டாகும். நெருங்கியவர்களின் ஆதரவு கிடைக்கும். சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். கலை துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்:
வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |