இன்றைய ராசி பலன்(02-08-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து உங்கள் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். உணவு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். புதிய நிலம் வீடு வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்:

உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதில் நேர்மறை சிந்தனை உருவாகும். நண்பர்களுடன் உங்கள் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். நன்மையான நாள்.

கடகம்:

இன்று உடற்பயிற்சி செய்வது அவசியம். இன்று தொழில் ரீதியாக உங்கள் தன்னம்பிக்கை உயரும். நீண்ட நாட்களாக விற்க வேண்டும் என்று நினைத்த இடம் ஒன்று விற்பனை ஆகும்.

சிம்மம்:

தந்தை உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகி செல்லும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். பாதுகாப்பாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி:

வாகன வகையில் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், இயந்திரப் பணியில் கவனமாக செயல்படுவதும் அவசியம்.  

துலாம்:

இன்று உடல் நிலையில் சில பாதிப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரிந்து சென்ற சொந்தம் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

உருவாகும் லட்சுமி நாராயணன் யோகம்: அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 4 ராசிகள்

உருவாகும் லட்சுமி நாராயணன் யோகம்: அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 4 ராசிகள்

விருச்சிகம்:

முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.  

தனுசு:

பிள்ளைகள் மீது அக்கறை செலுத்த வேண்டிய நாள். மாணவர்களுக்கு படிப்பில் கவன சிதறல் உண்டாகும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

மகரம்:

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். 

கும்பம்:

இன்று அலுவலகத்தில் வேலை செய்பவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். வழக்கமாக செய்யும் வேலைகளில் ஆதாயம் பெறுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US